சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு நாம் படித்து அறிந்த, கேட்டுத்...
சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு நாம் படித்து அறிந்த, கேட்டுத் தெரிந்து கொண்ட , நமது நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் சரித்திர உண்மைகள் , தியாகம் செய்த தலைவர்கள், அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றை,
சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் இன்று வரை நாடு முழுவதிலும் அரங்கேறிய நிகழ்வுகள், நடைபெற்ற மாற்றங்கள் வரை திருத்தி எழுதப்பட்ட இந்திய வரலாறாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் கவலையும் என்னைப் போன்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இது அடுத்த தலைமுறைக்கு குழப்பத்தையும் தவறான புரிதலையும் உண்டாக்கும் என்பது எனது கணிப்பு. அந்த அளவுக்கு நாம் இன்று தவறான பாதையில் பயணிக்கிறோம் என்பது வருத்தமாக உள்ளது.
ஜனநாயகத்தில் நாணயம் இல்லை. இதனால் சமுதாயம் சீரழிகிறது என்பதை நினைத்து பார்க்கும் போது கவலை ஆட்கொள்கிறது.தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி அதனால் அமைதியும் சீர்குலைந்து ஒற்றுமை உணர்வும் குறைந்து ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இதனால் வெவ்வேறு மொழி பேசுபவரின் பண்பாடு , கலாசசாரம் , நடைமுறை வாழ்க்கை , கோட்பாடு அனைத்தும் மாறிவிடுமோ என்ற எண்ணம் மேலோங்குகிறது .
பழனி குமார்
03.03.2020
03.03.2020