முதல் காதல்
முதல் காதல்..!
அரும்பென மீசை
குறுகுறு கண்கள்
கண்டதும் அவளை
கரும்பென அழைத்தது..!
உதறலில் ஏதோ
உணர்வினில் ஊற
கண்களால் கண்களில்
காயங்கள் ஆனது
உள்ளத்தில் பெண்
உருவமாய் வந்ததால்..!
உண்மையில் அவளால்
உறக்கமும் போனது
பாவையோ சென்றதும்
பருவமோ துடித்திட
பைத்தியம் ஆனது
பார்க்கவே மறுநாள்..!
எவனோ ஒருவன்
எழுதிய கோலம்
என்முன் அழகென
என்னமோ பண்ணுது..!
பனிவிழும் மலரில்
பளிச்சிடும் அழகில்
விருந்துகள் படைக்கும்
வயல்வெளி மலராய்
வாசணை தூவியே
வாடிக்கை ஆனாள்
வரவில்லை என்றால்
வலினான் ஆனேன்..!
அடித்திடும் இதயமோ
அவளையே தேடுது..!
கொலுசொலி வருமென
காவலாய் நிற்குது.!
என்னுயிர் என்பது
என்னிடம் இல்லை
உண்மையில் அவள்போல்
உலகினில் இல்லை
என்னையும் அவளோ
எளிதாய் வென்றாள்
உடலினை வதைத்து
உயிரினை எடுத்தாள்
என்னவோ ஆனது
எனக்குள் என்று
எடுத்துப் பார்த்த
இலக்கணம் எல்லாம்
வயதுக்கு வந்தாய்
வாலிபனே..! உனக்குள்
முளைத்தது காதல்
மொட்டென என்றது...!