அனுபவம்
அன்னையின் அன்பு அறிவதில்லை
பிறர் கடுன்சொல் கேட்கும் வரை...!!!
தந்தையின் பாசம் தெரிவதில்லை
தனியே தவிக்கும் வரை...!!!
அண்ணனின் அரவணைப்பு அறிவதில்லை
ஆசைப்பட்டது கிடைக்காத வரை ...!!!
உறவின் உண்மை உணர்வதில்லை
உதவி கிடைக்காத வரை...!!!
நட்பின் நன்மை நினைப்பதில்லை
நலமாய் வாழாத வரை...!!!