சுப்ரியா பாலசுப்ரமணியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுப்ரியா பாலசுப்ரமணியன்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  06-May-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Aug-2017
பார்த்தவர்கள்:  287
புள்ளி:  57

என் படைப்புகள்
சுப்ரியா பாலசுப்ரமணியன் செய்திகள்

இதுவரையில் பிறக்காத
என் குழந்தை
மிக மிக அதிர்ஷ்டசாலி
அதன் விதி
தெரிந்து விட்டது போல...!!!

மேலும்

(பெண் சிசு)சமூக பார்வை..! சிறப்பு..! 05-Oct-2021 3:45 pm

இதுவரையில்
இறைவன் இல்லை இல்லை என
நினைத்திருப்பவர்களுக்கு
என்னுடைய ஒரு சிறிய கருத்து...

தவறிருந்தால் தவிர்க்கவும்...

குழந்தையும் தெய்வமும் ஒன்று...!!!
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...!!!
எங்கிற வரிசையில்

இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ள
ஆசைப்படுகிறேன்

குழந்தை பிறக்காமல் வருடங்கள்
பல ஓடினாலும் கணவனை
மனதார நேசிக்கும் பெண்ணிடமும்...

அதே போல்
வேறு பெண்ணை நினைக்காமல்
மனைவியை உண்மையாய்
காதலிக்கும் ஆணிடமும்...

இறைவனை காணலாம்...

மேலும்

காட்டில் வாழும் மிருகங்கள் கூட
காயப்பட்ட உயிரினத்தை தீண்டுவதில்லை
நாட்டில் வாழும் மனிதர்கள்
காயப்பட்ட மனங்களையே காயப்படுத்துகின்றனர் ...

மேலும்

அன்பின் இலக்கணம் நீயே
ஆயிரம் அர்த்தங்கள் தந்தவள் நீயே ...

இன்றும் என்றும் இறைவி நீயே
ஈகை குணத்தில் ஈடில்லா உள்ளம் நீயே ...

உலகத்தில் உன்னைப்போல் யாருமில்லை
ஊரெல்லாம் சுற்றினாலும் உன் கைப்பிடி சோற்றுக்கு ஈடில்லை...

எட்டு வைத்து நடக்கையில் என்னருகில் நின்றவள் நீயே
ஏற்றங்கள் எதுவாயினும் ஏற்றி விட்டவள் நீயே...

ஐ (அரசன்) என ஆனாலும் அலட்டாதவள் நீயே
ஒன்றா இரண்டா நீ செய்த தியாகங்கள்
ஓர் நாளும் மறவேன் நானே...

ஔடதமானாய் பல சமயத்தில்
எஃகு போல் இருந்து என் வாழ்வை
வலிமையாக்கியவள் நீயே
என் தாயே...!!!
என் தாயே...!!!

மேலும்

எந்தன் மூச்சுக் காற்றோடு
முழுவதும் கலந்தவனே...!

என்னதான் நீ வேலைக்காக
என்னை விட்டு பிரிந்தாலும்
அறிவுக்கு புரியறது
மனசுக்கு புரியவேயில்லை...!

கானல் நீராய் வந்து போகிறாய்
காதல் சுவடை தந்து போகிறாய்
தேடி தேடி சோர்ந்து போகிறேன்
தினம் தினம் வாடி போகிறேன்...!

உன் பிரிவால்

என் பொறுமையின் அளவு புரிந்தேன்
உன் அன்பின் ஆழம் அறிந்தேன்...!

என் சகிப்புத்தன்மையின் அளவு தெரிந்தேன்
உறவுகளின் உண்மை நிலை அறிந்தேன் ...!!

எல்லாம் நன்மைக்கே எனும்
வார்த்தையின் அர்த்தம்
நன்றாக அறிந்தேன்...!!!

மேலும்

விழியின் விடுமுறை உறக்கம்
விதியின் விடுமுறை மாற்றம்

அன்பின் விடுமுறை பிரிவு
ஆசையின் விடுமுறை அமைதி

பகலின் விடுமுறை இரவு
இரவின் விடுமுறை பகல்

பாசத்தின் விடுமுறை துரோகம்
துரோகத்தின் விடுமுறை மன்னிப்பு

துன்பத்தின் விடுமுறை இன்பம் ...

மேலும்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி... 27-Jul-2021 10:32 am
விடுமுறையின் வரையறை நறுக்கென்று சொல்லும் கவிதை ! 04-Sep-2020 9:43 pm

அன்புள்ள கணவனுக்கு...

வாழ்க்கை என்னவென்று
புரியாமல் காதல் கொண்டேன்
தெரியாமல் ஊடல் கொண்டேன்
தினம் தினம் மனப்போராட்டம்
காலமும் கடந்தது கலக்கத்தில்

சகித்து போன உன் மௌனம்
மெல்ல மெல்ல எனை கொல்ல
உன் குணம் இதுதானோ என
குழப்பத்தில் நாட்களும் செல்ல
உனக்கு பிடித்தவர்களிடம்
உயிருக்குயிராக நடந்த நான்
உயிருக்குயிரான உன்னிடம்
உள்ளம் கொண்ட காதலை
உணர்வில் காட்ட தெரியாமல்
கோபக்காரியாகவே மாறினேன்...!!!

காலப்போக்கில்
உன் மௌனத்தின் காரணம்
நானே என அறிந்து
உள்ளுக்குள் துடியாய் துடித்தேன்...!!!
இதுவரையில் நீ என் மனதை
புண்படுத்தாததால்
உன் நிலை எனக்கு புரியாமலே போனது...!!!

உன்ன

மேலும்

நன்றிகள் நண்பரே ... 22-Aug-2020 11:11 am
...வலிகளை மனதில் சுமக்கும் சில ஆண்களுக்குள்ளும் தாய்மை உண்டு ..... என்பதை அறிந்தேன் .. ஆஹா அருமையான , மனதைத் தொட்டுவிட்ட வரிகள் வாழ்த்துக்கள் நட்பே 29-Nov-2019 1:40 pm

அன்புள்ள கணவனுக்கு...

வாழ்க்கை என்னவென்று
புரியாமல் காதல் கொண்டேன்
தெரியாமல் ஊடல் கொண்டேன்
தினம் தினம் மனப்போராட்டம்
காலமும் கடந்தது கலக்கத்தில்

சகித்து போன உன் மௌனம்
மெல்ல மெல்ல எனை கொல்ல
உன் குணம் இதுதானோ என
குழப்பத்தில் நாட்களும் செல்ல
உனக்கு பிடித்தவர்களிடம்
உயிருக்குயிராக நடந்த நான்
உயிருக்குயிரான உன்னிடம்
உள்ளம் கொண்ட காதலை
உணர்வில் காட்ட தெரியாமல்
கோபக்காரியாகவே மாறினேன்...!!!

காலப்போக்கில்
உன் மௌனத்தின் காரணம்
நானே என அறிந்து
உள்ளுக்குள் துடியாய் துடித்தேன்...!!!
இதுவரையில் நீ என் மனதை
புண்படுத்தாததால்
உன் நிலை எனக்கு புரியாமலே போனது...!!!

உன்ன

மேலும்

நன்றிகள் நண்பரே ... 22-Aug-2020 11:11 am
...வலிகளை மனதில் சுமக்கும் சில ஆண்களுக்குள்ளும் தாய்மை உண்டு ..... என்பதை அறிந்தேன் .. ஆஹா அருமையான , மனதைத் தொட்டுவிட்ட வரிகள் வாழ்த்துக்கள் நட்பே 29-Nov-2019 1:40 pm

மனதை கொள்ளை கொண்ட
மன்னவனே
இயல்பாய் வந்த இனியவனே ...
இடையில் வந்த உறவே
இறுதி வரை வரும் உறவே ...
விட்டுக்கொடுத்து போகும் உயிரே
விட்டுக்கொடுக்க முடியா உயிரே ...
இந்த வாழ்க்கை
எத்தனையோ சந்தோஷமும்
ஏராளமான கஷ்டமும்
கொடுத்திருக்கு ...
ஆனால்
உன்னோடு வாழும்போது
கஷ்டமெல்லாம்
அனுபவமாவும்
சந்தோசமெல்லாம்
நினைவாகவும்
மாறுது...
கண்ணீரும் இனிக்கிறது
உன் கைகள் துடைப்பத்தால் ...
பிறர் மேல் நீ காட்டும் பாசம் கண்டு
உன்மேல் நான் கொள்ளும் கோபம்
நம் காதலை அழகாய் சொல்லும் ...
உயிருக்குள் ஓடி வந்த
வார்த்தைகளை தேடி மெல்ல
கவிதைகள் கோடி

மேலும்

தாய் இருந்தால் துன்பம் இல்லை
தந்தை இருந்தால் தவிப்பு இல்லை
தங்கை இருந்தால் தனிமை இல்லை
தோழன் இருந்தால் தோல்வி இல்லை
தாத்தா இருந்தால் தயக்கம் இல்லை
பாட்டி இருந்தால் பயம் இல்லை
அண்ணன் இருந்தால் அனைத்தும் கிடைக்கும் அன்போடு...

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி 04-Aug-2018 3:28 pm
இவை அனைத்துமாக நாம் இருந்தால் யாரும் அனாதைல்லை அருமை 03-Aug-2018 2:02 pm

நீ வந்ததோ சைக்கிளில்
நான் வீழ்ந்ததோ உன் சிரிப்பில்

நீ பார்க்கவே பல முறை
பல சரக்கு கடைக்கு வந்திருக்கிறேன்

உன் பெயரின் உச்சரிப்பில்
உறைந்து தான் போனேன் ...!!!

உன் முதல் எழுத்தே இனிசியலாய்
மாறியது எனது நோட் புத்தகத்தில் மட்டும்

உன் கை பிடித்ததில்லை
உன் வாசம் நுகரவில்லை
உன் மடியில் தலை வைக்கவில்லை
அருகருகே அமர்ந்ததில்லை
மணிக்கணக்கில் பேசியதில்லை

கண்களாலேயே பேசிக்கொண்டோம்
கிரீட்டிங் கார்டை மட்டும் பரிமாறி கொண்டோம்
தூரத்தில் பார்த்தாலும்
பக்கத்திலே இருப்பதாய் உணர்ந்தோம்
நீ பேசிய வார்த்தைகள் இன்னும்
செவிகளில் நீங்கா ஒலியாய்...!!!

உயிராய் உன்னை ந

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி... அவனையே நினைத்துக் கொண்டிருப்பதாய் சொல்லவில்லை... முதல் காதல் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை என்றே கூறியிருக்கிறேன்... புதிய முயற்சி தவறிருந்தால் இது போலவே தெரிவிக்கவும்... 29-Aug-2018 4:21 pm
அப்படி ஒருவனை மனதில் வரித்து பின் ஏன் ஒருவனை மணந்து கணவனென்று அவனை ஏற்று குழந்தையும் பெற்று.... பின்னும் அந்த'அவன்' நினைப்பில் உள்ளம் இது சரியென்று தோணலையே ....நட்பே 29-Aug-2018 2:21 pm

பல மாதங்கள் வீட்டில் தங்கினாய்
பலர் மனதில் ஆழமாய் தங்கினாய்
குறும்பு தனத்தில் சிரிக்கவும் வைத்தாய்
சில நேரங்களில் சிந்திக்கவும் வைத்தாய்

பாடங்கள் கற்று கொள்ள வந்தாய்
பாடம் கற்றும் கொடுத்தாய்
அடுத்த நொடி என்னவென்று ஆச்சரியமாய்
ஓடியது நாட்கள் வருடங்களாய்

கல்லூரிக்கு சென்றாலும் நீயும்
சிறு பிள்ளைதானே...!!!
உன் சிறு சிறு பொய்களிலும் ஒரு
உண்மையை கண்டேன் எளிதாய்

ஒவ்வொரு நாளும்
என் தங்கையை (அம்மு)
நித்தமும் நினைக்க வைத்தாய் …

நெஞ்சில் நீங்காத நினைவுகள் தந்தாய்
வாழ்க வளமுடன்...!!!

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி, தம்பி 04-Aug-2018 3:36 pm
நல்ல பதிவு.... உங்களின் சகோதரி பாசம் என்னை கட்டிபோட்டுவிட்டது....... 03-Aug-2018 5:18 pm
தங்கைப் பாசம் தொடர வாழ்த்துக்கள் 03-Aug-2018 4:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே