தங்கை
பல மாதங்கள் வீட்டில் தங்கினாய்
பலர் மனதில் ஆழமாய் தங்கினாய்
குறும்பு தனத்தில் சிரிக்கவும் வைத்தாய்
சில நேரங்களில் சிந்திக்கவும் வைத்தாய்
பாடங்கள் கற்று கொள்ள வந்தாய்
பாடம் கற்றும் கொடுத்தாய்
அடுத்த நொடி என்னவென்று ஆச்சரியமாய்
ஓடியது நாட்கள் வருடங்களாய்
கல்லூரிக்கு சென்றாலும் நீயும்
சிறு பிள்ளைதானே...!!!
உன் சிறு சிறு பொய்களிலும் ஒரு
உண்மையை கண்டேன் எளிதாய்
ஒவ்வொரு நாளும்
என் தங்கையை (அம்மு)
நித்தமும் நினைக்க வைத்தாய் …
நெஞ்சில் நீங்காத நினைவுகள் தந்தாய்
வாழ்க வளமுடன்...!!!