ஆத்மார்த்த குரு

ஆத்மார்த்த குரு

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு
ஆறாம் வகுப்பில் ஆறு மாதம் தினமும்
அரை மணி நேரம் என்னை வழிநடத்தினாய்
கண்டிப்பை காட்டினாய்
மன உறுதியைக் கூட்டினாய்
தன்னம்பிக்கையைக் ஊட்டினாய்

இன்று உம் எண்பது வயதில்
உம் இல்லத்தில் சந்தித்த போது
அதே மன உறுதியைக் கண்டேன்
தன்னம்பிக்கையை உணர்ந்தேன்

அன்று உம் பேச்சைக் கண்டு
மெய் மறந்தேன்
இன்று உம் பேச்சைக் கண்டு
மெய் சிலிர்த்தேன்

கண்டிப்பானவரே
கண்ணியமானவரே
கடமை தவறாதவரே
நீவீர் நலமுடன் வாழியவே!!

ராரே

எழுதியவர் : ராரே (3-Aug-18, 1:27 pm)
பார்வை : 212

மேலே