ஆடிப் பதினெட்டு...

பம்பையை கடந்து ஏறும் படிகளும்
பதினென் கீழ்க்கணக்கு நூல்களும்...
பதினெட்டுதான்...!
மெய்யெழுத்தோடு அவள் மேனியழகு
மெருகேறிப் போனதும்...
பதினெட்டுதான்...!
அகண்டு விரிந்த காவிரி "ஆடி"யசைந்தாடி
அனைவரையும் ஆர்ப்பரிக்க வருவதும்...
பதினெட்டுதான்...!