இறைவன் எங்கே
இதுவரையில்
இறைவன் இல்லை இல்லை என
நினைத்திருப்பவர்களுக்கு
என்னுடைய ஒரு சிறிய கருத்து...
தவறிருந்தால் தவிர்க்கவும்...
குழந்தையும் தெய்வமும் ஒன்று...!!!
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...!!!
எங்கிற வரிசையில்
இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ள
ஆசைப்படுகிறேன்
குழந்தை பிறக்காமல் வருடங்கள்
பல ஓடினாலும் கணவனை
மனதார நேசிக்கும் பெண்ணிடமும்...
அதே போல்
வேறு பெண்ணை நினைக்காமல்
மனைவியை உண்மையாய்
காதலிக்கும் ஆணிடமும்...
இறைவனை காணலாம்...