எனக்கு பிடித்த பாய்

எனக்கு பிடித்த பாய்.*

பனை ஓலைப் பாய்
பார்த்திருப்பீர்,
அதன் மேல் படுத்தும்
இருப்பீர்,
பனாட்டு பார்த்திருப்பீர்,
பாய் மேல் காயப் பார்த்திருப்பீர்.
.
பலவர்ணப் பாய் உண்டு,
பல விலையில் வருவது
உண்டு,
பள்ளியில் பின்னியதும்
உண்டு.

காற்று அடித்தால்,
சுழன்றே பறக்குமாம்
அந்தப் பாய்.

எனது பாய்
பறக்காது ,
அம்மா பிறந்த பாய்,
நான் வளர்ந்த பாய்,
நண்பர்கள் கண்ட பாய்,
உலகத்தில் சிறந்த பாய்
எனக்கு பிடித்த பாய்
சண்டிலிப்பாய்.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எனது இளவேனில்
காலம் சண்டிலிப்பாய்
என்ற ஒரு கிராமம். அது
யாழ்ப்பாணத்தில்
உள்ளது.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (16-Sep-21, 11:17 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : enakku piditha Boy
பார்வை : 56

மேலே