குட்பை சொல்வோம் குட்நைட்டுக்கு
கொசுவுக்கு விடை கொடுப்பவர் யாரு;
கொசு தொல்லையை விரட்ட ,
வீட்டையே கொளுத்தினால் போகுமா பாரு;
விருந்துண்ண விரட்டியே வரும் கொசுவைப்பாரு;
விட்டா பாரு என்றே விடா பிடியாக,
வேட்டையாடவரும் கொசுவைக்கேளு.
அது படுத்தும் பாட்டைப் பாரு;
சிறுசா இருக்கு பாரு;
சீறிவரும் கொசுவின் மூக்கை பாரு;
அது
செய்யும் சேட்டையை கேளு;
டெங்கு சிக்கன் குன்னியா யானைக்கால் வியாதிஎன்று
பெரிய பெரிய நோயை தருபவர் யார் கேளு.
படுத்துறங்க விடாமல் பாடாய் படுத்து கின்றான் பாரு;
படை எடுத்தே சுத்தி வருகிறார் பாரு;
தூக்கத்தைக் கெடுத்து துன்புறுத்த வருகின்றார் பாரு;
துடிக்க துடிக்க கத்தவிட்டே;
இரத்தத்தை உறிஞ்சிகிறார் பாரு;
போன ஜென்மத்து பகையா கேளு.
பொல்லாத கொசுவிடம் ;
ஈவு இரக்கம் இல்லையா என்றே கேளு….
இரத்த வங்கி நடத்தும் இந்த கொசுவாளரைக் கேளு;
கொள்ளையர் கூட்டமாய்;
கூடியே வந்து தொல்லை தருவது
ஏன் ஏன் என்றே கேளு.
இரத்த சூப்பை ருசித்து குடித்துவிட்டு;
இரக்கம் இல்லாமல் கிரங்கி கிடப்பதைப்பாரு;
அட
கொசுவுக்குக்கு வீடு கொடுத்தது யாரு;
கொய் கொய் என்றே கொத்தாய் பறந்து வந்தே;
சொய் சொய் என்றே சுத்திவரும் பாரு;
செய் என்றே சயனத்தில் விழுழ்ந்தால்
சாராய் இரத்தத்தை உறிஞ்சிடும் பாரு;
சே என்றே போர்வையைப் போர்தினால்,
சேர்ந்தே புகுந்திடுவான் போர்வைக்குள் பாரு.
கூட்டாய் கூடி கூட்டனிவைத்தே,
குடும்பமாய் குடியேறி,
கூப்பிடாமலே,
குதூகலமாய் குடித்திடும் உன் இரத்தைப்பாரு.
பார்திட பறந்து பறந்து சென்றும், வந்தும்.
படையுடன் பாய்திடுவான் படுக்கையின் மேலே.
ஊசி மூக்காலே
உறிஞ்சே குடித்திடுவான் உன் இரத்தத்தைப் பாரீர்.
ஊரெங்கும் சுற்றுவான்,
உபத்திரம் கொடுக்கவே வருவான்.
உறக்கம் இல்லாமல் சுத்துவான்,
ஓயாமல் கத்துவான்,
காசுவாங்காமலேயே,
ஊசி குத்துவான்,
ஊருக்குள்ளே இவன் பேறு கேளு.
காலை விரைந்தவுடன்,
கண்டிட மறைந்திடுவான்,
காணாமல் போய்விடுவான்,
காற்றாய் மறைந்திடுவான்,
காணமுடியாத இடத்திலே,
ஓடியே ஒளிந்திடுவான்.
.
இரவு மீண்டும்,
இசையுடன் திரும்பி வருவான்;
ஆசையாய் இசைத்தே தோளில்,
அமர்ந்தே கடிப்பான்.
காதலைச் சொல்வான்;
கடித்தே வதைப்பான்;
ருசியுடன் சுவைப்பான்.
கொட்டிடும் தேளுக்கு கொடுக்கிலே விஷம்;
கடித்திடும் கொசுவுக்கு,
வாயிலே விஷம்.
அவன் கொடுத்திட வந்தாள்.
இவன் எடுத்திட வந்தான்.
எட்டியே வந்தான்;
எட்டாத ஓட்டையில் புகுந்து.
சாக்கடையில் சம்சார வாழ்கை;
சகிக்கவில்லை சலசலத்த புழுவை.
பொங்கியே வருவான்.
புயலாக வருவான்.
போக்கிடம் தெரியாது.
பொது இடத்தில் நுழைவான்.
நாட்டியம் ஆடுவான்.
தானே பாட்டும் இசைப்பான்.
காசு கேட்காமலையே ஊசியைக்குத்தி.
நோயைத் தரும் மருத்துவனும் இவனே,
உறக்கத்தைக் கெடுத்த கொடூர அரக்கனும் இவனே.
பார்க்க கடுகளவாக இருப்பினும்,
படுத்துவான் பாரீர்,
பதைத்திட மனிதனை.
படபடத்து,
அவனை விரட்ட,
ஓயாத போராட்டத்திலும்,
விரட்டிடவே,
வகை வகையாய் ஆயுதம் எடுப்பான் மனிதனும்.
வேலியிட்டாய் வலையும் விரிதாய்,
சன்னலில் பின்னினாய் வலையும் ,
மருந்து அடித்தாய்,
ஆயினும் வம்பாய் வந்து விட்டான்.
தினம் தினம் போரட்டம்,
கொகுக்கள் போட்டன தினம் தினம் ஆர்ப்பாட்டம்.
கொசுவை விரட்ட குப்பையை விரட்டு,
தேங்கிய நீரை தினம் தினம் நீக்கு,
குட்பை சொல்வோம் குட்நைட்டுக்கும்.