கண்ணிரண்டும் எழுதுவதோ காதல் சொல்லும் கடிதம்

கண்களில் நீந்தும் கயலிரண்டும் நீலநிறம்
கண்கள் எழுதுவதோ காதல் எழில்கடிதம்
கண்ணிமைமூ டித்திறக் கும்கவிதைப் புத்தகம்
கண்ணிரண்டும் மௌனமாய் பேசுவதோ தத்துவம்
பெண்ணே விளக்கிநீ சொல்வாயா மாலையில்
கண்ணன்நான் காத்திருப் பேன்

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

கண்களிலே நீந்துகின்ற கயலிரண்டும் நீலநிறம்
கண்ணிரண்டும் எழுதுவதோ காதல்சொல் லும்கடிதம்
கண்ணிரண்டும் மௌனமாக பேசுவதெத் தத்துவமோ
பெண்ணேநீ விளக்கமாகச் சொல்வாயா மாலையிலே

---காய் வாய்ப்பாடே அடிதோறும் பொலியும் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-24, 8:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 7

மேலே