முதல் காதல்

நீ வந்ததோ சைக்கிளில்
நான் வீழ்ந்ததோ உன் சிரிப்பில்

நீ பார்க்கவே பல முறை
பல சரக்கு கடைக்கு வந்திருக்கிறேன்

உன் பெயரின் உச்சரிப்பில்
உறைந்து தான் போனேன் ...!!!

உன் முதல் எழுத்தே இனிசியலாய்
மாறியது எனது நோட் புத்தகத்தில் மட்டும்

உன் கை பிடித்ததில்லை
உன் வாசம் நுகரவில்லை
உன் மடியில் தலை வைக்கவில்லை
அருகருகே அமர்ந்ததில்லை
மணிக்கணக்கில் பேசியதில்லை

கண்களாலேயே பேசிக்கொண்டோம்
கிரீட்டிங் கார்டை மட்டும் பரிமாறி கொண்டோம்
தூரத்தில் பார்த்தாலும்
பக்கத்திலே இருப்பதாய் உணர்ந்தோம்
நீ பேசிய வார்த்தைகள் இன்னும்
செவிகளில் நீங்கா ஒலியாய்...!!!

உயிராய் உன்னை நினைத்தேன்
உயிர் போனாலும் போகும்
உன்னை பிரிய மாட்டேன் என நினைத்தேன்

உண்மையாகத்தான் காதலித்தோம்
ஏன் சேரவில்லை என்ற கேள்வி
கேள்வி குறியாய் நிற்கிறது

ஜாதியால் பிரிந்தேனோ
தைரியம் இல்லாமல் பிரிந்தேனோ ...!!!

அம்மாவின் கண்ணீரால் கரைந்து தான் போனதோ
கணவனாய் நினைத்தேன் உன்னை
அப்பாவின் அதட்டலால் கனவாய் போனதோ

பள்ளி காலம் என்பதால் பயந்து தான் போனேனோ
அம்மா அப்பாவை நினைத்து வேண்டாமென பிரிந்தேனோ

உன்னை பார்த்து பல வருடம் ஆனது
உன் முகம் மட்டும் என் நினைவில் - அப்படியே...!!!

ஒரு முறையேனும் உன்னை கானேனா?
நல்லா இருக்கியா என கேட்பேனா?
எங்கிருக்கிறாயோ
எப்படி இருக்கிறாயோ
எத்தனை குழந்தைகளோ
என் அருகிலேயே இருக்கிறாயோ
நான் அறியாமலேயே இருக்கிறாயோ...!!!

ஆயிரம் ஆயிரம் கேள்விகள் மனதிலே
என் வாழ் நாளில் ஒரு முறையேனும்
உன்னை காண வேண்டுகிறேன் கடவுளிடம்...!!!

உனக்கும் என் நினைப்பு இருக்குமோ
இருந்தால் ஒரு முறையேனும்
சந்திக்க வேண்டுகிறேன் சாமியிடம்…!!!

என் மேல் கோபம் இல்லையென்றால்
ஒரு முறையேனும் நாம் பேச வேண்டுகிறேன் இறைவனிடம் …!!!

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (28-Aug-18, 3:15 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 214

மேலே