பா நிபி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பா நிபி |
இடம் | : கொடைக்கானல் |
பிறந்த தேதி | : 18-Dec-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2018 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 42 |
எழுத முடியாத கவிதைகள்
என் கனவுகள் !
கலைக்க முடியாத கனவுகள்
என் கவிதைகள் !
எனது தோட்டத்து பூக்களெல்லாம்
எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றன
காதல் மொழிகளை ..
என் காதல் கிரகத்தை
படைத்தவளே!
எப்போது படைக்கப் போகிறாய்
எனக்கான பகலவனையும் நிலவையும்
வானவில்லையும் பூக்களையும் ..
ஐயப்பனே
அருள் கூர்ந்து சொல்
அடியவனிடம்
உனக்கு பாலூட்டியவளுக்கு
இருக்கவில்லையா
அந்த நாட்கள் ..?
மனம் கனத்தது என்று
இமைகள் மூடிய வேளையில்
உயிர் சிலிர்த்து
ஓடியது ஓடை நீராய் ..
கரங்கள் குவித்து
அள்ளிப் பருகினாய் நீ
அதிலிருந்து ...
உன் துப்பட்டாவை காற்றுடன்
பேச விட்டுவிட்டு என்ன செய்துக்
கொண்டிருக்கிறாய் நீ ...
அவை என்னையும் அல்லவா
சேர்த்துக்கொள்கின்றன அவ்வுரையாடலில் ..
யாரென்று தெரியாத உன்னை
காதலித்து கொண்டிருக்கிறேன் என் கவிதையில் .
யாரென்று தெரியாத நீயே
ஆகிப்போனாய்
என் எழுத்தின் ஆதி வடிவமாய் ..
நீ என் எழுத்துக்களை
கண்ணாடியாக்கி கொண்டு விட்டாயோ ?
யாரன்று தெரியாத உன்னையே
பிரதிபலிக்கின்றன என் எழுத்துக்கள் ..
கற்பனை என்று மட்டும் சொல்லாதே
கனவு என்று மட்டும் கரைந்துவிடாதே
கற்பனையையும் கனவையும் தாண்டிய
ஏதோ ஒன்றின் வடிவமாய்
யாரென்று தெரியாத உன்னை '
காதலிக்க செய்துக் கொண்டிருக்கின்றன
என் எழுத்துக்கள் ..
ஒரு வேளை நீ இருக்கலாம்
நீ இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
உன் இருப்பின் இல்லாமையையும்
உன் இல்லாமையின் இருப்பையும்
உணர்த்திக் கொ
பாரதா! பாரதா!
உன் தோளில் பாரம் போதுமா?
சிக்கினாய் மீனைப்போல்
கொக்கியில் கோரமாய்
வண்ணத்து பூச்சியே!
ஓடுகள் தேவையா?
மின்மினி மேனியில்
மின்சாரம் பாயுதா?
பச்சை நீர் ஓடையில்
சாயங்கள் சேர்வதா?
தேரடி வீதியில்
நீ கால்மிதி பூக்களா?
யாரோ தூங்க நீ
வீணை மீட்டினால்
எப்போது மெத்தைமேல்
காலை நீட்டுவாய்?
யோரோ ஏறிப்போக
வண்டி ஓட்டினாய்
நீ எங்கும் போகாமல்
அங்கேயே நிற்கிறாய்
உழவு இல்லை யென்று
வரவும் இல்லை இன்று
அயல் நாடு சென்று
கயல் விற்க போகிறான்
பசுக்கள் இல்லை என்று
பாலும் இல்லை இன்று
காற்றாடி தெருவில்
நூல் விற்க போகிறான்
அலையும் ஏது?
வலையும் ஏது?
கசடுகள் மட்டும்
வான்மதி கொஞ்சும்
வான்பொழுது
மெல்லிய மூச்சுக்காற்று
வருடும் தருணம்
வானவில் உதடுகள்
நெற்றியில் முத்தமிட
மலர்ந்தது காதல்...
சிறு கோபங்கள்
சிறு சலனங்கள்
இருந்தும் புன்னகைக்கும்
காதல்...
உதட்டில் உருளும்
புன்னகை...
விரிகிறது நாட்களின்
தொடக்கம்...
என்னவன்
அவன்தான்...
மார்கழி குளிரில்
பூத்த மலர்தான்...
- மூ.முத்துச்செல்வி