அவன் காதல்

வான்மதி கொஞ்சும்
வான்பொழுது
மெல்லிய மூச்சுக்காற்று
வருடும் தருணம்
வானவில் உதடுகள்
நெற்றியில் முத்தமிட
மலர்ந்தது காதல்...
சிறு கோபங்கள்
சிறு சலனங்கள்
இருந்தும் புன்னகைக்கும்
காதல்...
உதட்டில் உருளும்
புன்னகை...
விரிகிறது நாட்களின்
தொடக்கம்...
என்னவன்
அவன்தான்...
மார்கழி குளிரில்
பூத்த மலர்தான்...

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (15-Oct-18, 2:02 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : avan kaadhal
பார்வை : 146

மேலே