யாரென்று தெரியாத உன்னை

யாரென்று தெரியாத உன்னை
காதலித்து கொண்டிருக்கிறேன் என் கவிதையில் .
யாரென்று தெரியாத நீயே
ஆகிப்போனாய்
என் எழுத்தின் ஆதி வடிவமாய் ..

நீ என் எழுத்துக்களை
கண்ணாடியாக்கி கொண்டு விட்டாயோ ?
யாரன்று தெரியாத உன்னையே
பிரதிபலிக்கின்றன என் எழுத்துக்கள் ..

கற்பனை என்று மட்டும் சொல்லாதே
கனவு என்று மட்டும் கரைந்துவிடாதே
கற்பனையையும் கனவையும் தாண்டிய
ஏதோ ஒன்றின் வடிவமாய்
யாரென்று தெரியாத உன்னை '
காதலிக்க செய்துக் கொண்டிருக்கின்றன
என் எழுத்துக்கள் ..

ஒரு வேளை நீ இருக்கலாம்
நீ இல்லாமலும் இருக்கலாம்
ஆனால்
உன் இருப்பின் இல்லாமையையும்
உன் இல்லாமையின் இருப்பையும்
உணர்த்திக் கொண்டே இருக்கின்றன
என்னிடமிருந்து பிரவகிக்கும் அவ்வெழுத்துக்கள் ..

'அன்பே நான் உன்னை காதலிக்கிறேன்'
இவை எழுத்துக்களா ?
இவை நீயா ?
இவை நானா ?
ஆனாலும் அன்பே
நான் உன்னை காதலிக்கிறேன் .....

எழுதியவர் : பா.நிபி (19-Oct-18, 1:46 pm)
பார்வை : 95

மேலே