காதல்

வசந்தத்தில் காலை வேளை,
நதியோர புல் வெளியில் நான்,
புல் வெளிக்கு மேலாடைபோர்த்தியது போல்
அன்றலர்ந்த செண்டிகைப்பூக்கள்
பூத்துகுலுங்கி என்னைப்பார்த்து
புன்முறுவல் தந்ததுபோல் நான் உணர,
நதிமீது தவழ்ந்து வந்த தென்றல்
புல்வெளி சண்டிகைப்பூக்களை தன்
விரல்கொண்டு தடவிப்போக ....................

என் நினைவலைகள் அந்த கடந்த கால
வசந்தத்தின் அந்த ... இனிய காலை
வேளையை என்முன் நிறுத்தியது;

இதோ, இதே, இந்த புல்வெளியில்
அன்றும் பூத்திருந்த செண்டிகைப்பூ
மலர் படுக்கையின் மீது ஒய்யாரமாய்
என் மடிமீது படுத்திருந்த என்னவளின்
கார்க்கூந்தலை என் விரல்கள் மெல்ல கோதிவிட
அவள் சொன்னாள்,' அன்பே, தென்றல் தீண்டும்
இன்பம் கண்டேன் உந்தன் இந்த விரல்கள் தீண்டலில் என்றாள்"
அப்படியே அவளை நான் அள்ளி அணைத்துக்கொள்ள.

அன்று வசந்தம் தந்த அந்த காதல் இன்பம் ,
இன்றும் என் மனதில் பசுமையாய்
அந்த நதியோர புல்வெளிபோல் காண்கின்றேன் நான்.
நினைத்தாலும் என்றும் இளமையாய் மணக்கும் காதல்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Oct-18, 12:55 pm)
Tanglish : kaadhal
பார்வை : 68

மேலே