சிறுமிகள்

அருகருகே பறப்பது தோழிகள்
அருகில் இருப்பது கோழிகள்

ஓடிவிளையாடு பாப்பா
பாரதி சரியாகச் சொன்னார்
துரத்தும் ஆண்களிடம் தப்பிக்க
ஓடவேண்டுமல்லவா?

இவர்கள் பாவாடை
அணிந்த சிறுமிகள்
பா வாடை அறியாத
பெண் தருமிகள்

அன்னைக்குப் பக்கத்தில்
விளையாடாது தென்னைக்குப்
பக்கத்தில் விளையாடும்
சிறுமிகள்
இன்னும் இவர்களைப்
பார்க்கவில்லை போலும்
மனிதக் கிருமிகள்

கையில் எடுத்தக் கயிற்றை
வாழ்க்கையில் எடுக்காதீர்

எழுதியவர் : குமார் (19-Oct-18, 2:06 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : sirumigal
பார்வை : 79

மேலே