மௌனம் கலைந்திட

மரநிழ லில்மௌன மாக அமர்ந்தான்
கரைந்த தொருகருமைக் காகம் மரக்கிளையில்
இட்டது ஒன்றை இவன்தலை மீதினில்
சட்டென் றெழுந்தான் பெரும்கோவத் தில்பார்த்தான்
மௌனம் கலைந்திட மௌனயோக மும்கலைய
பாவம் நடந்தான் புதிய மரம்தேடி
காகம் மரத்தின் கிளைஉச் சியிலிருந்து
காகா வெனச்சிரித்த தே

----பல விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-24, 11:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே