என் பையன்களை கெடுத்துட்டேனே

என் பையன்களை நானே கெடுத்துட்டேனே!



நான் அவுங்களுக்குத் தமிழ்ப் பேருங்களை


வச்சா மருகாதி இருக்காதுன்னு என்ற

குடிகார நண்பன் ஒருத்தன் பேச்சைக்


கேட்டு அவஞ் சொன்ன பேருங்களை

வச்சேன்.

@@@@@

என்னய்யா ஆச்சு?

@@@@@@@

அவன் என்ற பையன்களுக்கு 'சோமா,

சூரா'--ன்னு பேரு வைக்கச் சொன்னான்.

நானும் அந்தப் பேருங்களை என்ற


இரட்டைப் பசங்களுக்கு வச்சிட்டேன்.

அவனுக படிச்சுப் பட்டம் வாங்கியும்

பிரயோசனம் இல்லை.

@@@@@@@

ஏன்? என்ன ஆச்சு?

@@@@@@@

டாசுமாக்கே கதின்னு கெடக்கரானுக.

@@@@@@@

அது அவுங்களோட பெயர் இராசி.

@@@@@@

பெயர் இராசியா?

@@@@@@@

ஆமய்யா. சோமா, சூரா அதிகாலத்தில்

மக்கள் குடிச்ச மதுவோட பேருங்க ஐயா.

அவுங்க குடிக்காம என்ன செய்வாங்க?

@@@@@@@@

ஐயோ கடவுளே! என்ற பசங்களை எப்படித்

திருத்துவேன்.

@@@@@@@@@@

குடிகாரங்களை மதுப்பிரியர்கள்னு தான்

சொல்லணும். அவுங்களைத் திருத்த

அரசாங்கமே ஒரு அமைப்பை நடத்துதாம்.

அங்க அவுனுகளைச் சேர்த்துவிட்டா மூணு

மாசத்தில் திருந்தி வருவாங்க.

@@@@@@

அப்பிடியா. ரொம்ப நன்றி ஐயா.

எழுதியவர் : மலர் (20-Aug-25, 7:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 21

சிறந்த நகைச்சுவைகள்

மேலே