காலம்காத்தால நீயும் கண்ணுமணி எந்திரிடா

காலம்காத் தாலநீயும் கண்ணுமணி எந்திரிடா
ஆலமரக் குச்சியாலே அன்புமணி பல்துலக்கு
ஆலலம்ப நல்லாநீ ஆடிநீந் திக்குளிச்சு
பாலுமணி பள்ளிபோ டா

---ஒரு விகற்ப இன்னிசை "கொச்சை" வெண்பா
காத்தால எந்திரிடா குளிச்சு ----கொச்சைச் சொற்கள்

அடி எதுகை ---கால ஆல ஆல பாலு

1 3 ஆம் சீர் மோனை : கா க ஆ அ ஆ ஆ பா டா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Nov-24, 8:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே