வேர்வையில் குளிக்கிறான்

பாரதா! பாரதா!
உன் தோளில் பாரம் போதுமா?
சிக்கினாய் மீனைப்போல்
கொக்கியில் கோரமாய்

வண்ணத்து பூச்சியே!
ஓடுகள் தேவையா?
மின்மினி மேனியில்
மின்சாரம் பாயுதா?
பச்சை நீர் ஓடையில்
சாயங்கள் சேர்வதா?
தேரடி வீதியில்
நீ கால்மிதி பூக்களா?

யாரோ தூங்க நீ
வீணை மீட்டினால்
எப்போது மெத்தைமேல்
காலை நீட்டுவாய்?
யோரோ ஏறிப்போக
வண்டி ஓட்டினாய்
நீ எங்கும் போகாமல்
அங்கேயே நிற்கிறாய்

உழவு இல்லை யென்று
வரவும் இல்லை இன்று
அயல் நாடு சென்று
கயல் விற்க போகிறான்
பசுக்கள் இல்லை என்று
பாலும் இல்லை இன்று
காற்றாடி தெருவில்
நூல் விற்க போகிறான்

அலையும் ஏது?
வலையும் ஏது?
கசடுகள் மட்டும் தேங்குதே
காற்று ஏது?
பூக்கள் ஏது?
வேர்வை வாடை வீசுதே

எழுதியவர் : தனசேகர் மு (19-Oct-18, 11:38 am)
சேர்த்தது : தனசேகர் மு
பார்வை : 457

மேலே