தொலைதூரக் காதல்

எந்தன் மூச்சுக் காற்றோடு
முழுவதும் கலந்தவனே...!

என்னதான் நீ வேலைக்காக
என்னை விட்டு பிரிந்தாலும்
அறிவுக்கு புரியறது
மனசுக்கு புரியவேயில்லை...!

கானல் நீராய் வந்து போகிறாய்
காதல் சுவடை தந்து போகிறாய்
தேடி தேடி சோர்ந்து போகிறேன்
தினம் தினம் வாடி போகிறேன்...!

உன் பிரிவால்

என் பொறுமையின் அளவு புரிந்தேன்
உன் அன்பின் ஆழம் அறிந்தேன்...!

என் சகிப்புத்தன்மையின் அளவு தெரிந்தேன்
உறவுகளின் உண்மை நிலை அறிந்தேன் ...!!

எல்லாம் நன்மைக்கே எனும்
வார்த்தையின் அர்த்தம்
நன்றாக அறிந்தேன்...!!!

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (27-Jul-21, 10:24 am)
பார்வை : 89

மேலே