அன்புள்ள கணவன்

அன்புள்ள கணவனுக்கு...

வாழ்க்கை என்னவென்று
புரியாமல் காதல் கொண்டேன்
தெரியாமல் ஊடல் கொண்டேன்
தினம் தினம் மனப்போராட்டம்
காலமும் கடந்தது கலக்கத்தில்

சகித்து போன உன் மௌனம்
மெல்ல மெல்ல எனை கொல்ல
உன் குணம் இதுதானோ என
குழப்பத்தில் நாட்களும் செல்ல
உனக்கு பிடித்தவர்களிடம்
உயிருக்குயிராக நடந்த நான்
உயிருக்குயிரான உன்னிடம்
உள்ளம் கொண்ட காதலை
உணர்வில் காட்ட தெரியாமல்
கோபக்காரியாகவே மாறினேன்...!!!

காலப்போக்கில்
உன் மௌனத்தின் காரணம்
நானே என அறிந்து
உள்ளுக்குள் துடியாய் துடித்தேன்...!!!
இதுவரையில் நீ என் மனதை
புண்படுத்தாததால்
உன் நிலை எனக்கு புரியாமலே போனது...!!!

உன்னை புகழ வார்த்தைகளில்லை
பத்து மாதம் சுமக்கும் பெண்களுக்கே
தாய்மை உண்டு என்றிருந்தேன்

பல வருடங்கள்
வலிகளை மனதில் சுமக்கும்
உங்களை போன்ற
ஆண்களுக்கும் தாய்மை உண்டு என்பேன்...!!!

அன்புள்ள மனைவி...

எழுதியவர் : supriya (29-Nov-19, 12:11 pm)
Tanglish : anbulla kanavan
பார்வை : 474

மேலே