நில்லாயோ சோலைக் கிளியே

பாராயோ என்னை
பச்சைக்கிளியே /
பால் வடியும்
முகமடி கண்மணியே/

உன் சொல்லு
எனக்கு நெல்லுமணி /
நீ யும் ஓடாதே
என் பொன்மணி/
கலங்கிடும் எந்தன்
இரு கண்ணுமணி/

எட்டி வாரேன்டி
ஒட்டிக்க வாடி/
தொடர்ந்து வாரேன்டி
தொட்டுக்க வாடி/

குசும்பாகப் பேசிக்கலாம்
ஒண்ணாக சிரிச்சுக்கலாம்/
கண்ணாம் பூச்சி ஆடிக்கலாம் கட்டியணைச்சுக்கலாம் /
நீ நில்லாயோ சோலைக் கிளியே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Nov-19, 11:55 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 90

மேலே