உயிரே உனக்காக ஒரு கவிதை

பறக்கத் துடிக்கும் எனது மூச்சைப்/
பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தி/
உறுதியான உன் காதலுக்காக என்/
இறுதி வரிகளில் கண்ணீர்க் காவியம்/
தண்டபாலம் போல் ஒட்டாமல் போனது/
பாழடைந்த இல்லப் பூட்டைப்
போல் திறவாமல் போனது /
பலி கேட்கும் புதையல் கதையாகிப் போனது/
நீரிலே கொட்டிய எண்ணெய்யாகிப் போனது/
நாம் கொண்ட காதலின் நிலமை/
பிரிப்பதில் குறியான நமது பெற்றோர் /
பிடாரி ஆட்டம் போட்ட மச்சான் /
பிரித்திடவே குதியாய்க் குதித்த உறவு/
பின் வாங்கிடு காதலில் என்றுரைத்த நண்பன்/
பிரிந்தால் நாம் பிணம் என்பதை அறியாதவர்கள்/
மலரோடும் பனியோடும் மடிசாயும் நிலவோடும்/
காற்றோடும் நாற்றோடும் கடல் தாண்டும் முகிலோடும்/
ஒப்பிட்டு ஒப்பில்லா மகிழ்ச்சி கொண்டு/
நாம் இருவரும் மாறி மாறி வரைந்திட்ட/
காவியக் கவிதை அனாதையாகப் பெட்டகத்தில் /
வாழ்வின் இறுதியில் மரணத்தின் முடிவில்/
உயிரே உனக்காக ஓர் கவிதை/
கிறுக்கி மடித்து இறுக்கிப் பிடித்தேன்
எனது கரத்தில்/
தேர்வுக்கு நன்றிகள் பல 😊❤🙏