ஆத்து மேட்டுல அவள் யாரோ

கொய்யாக்காய்
கொண்டக் காரியெட/
கொய்து சொசுவம்
எடுத்துக்கிட்ட சேலக்காரியெடா/

தண்டையும் கெண்டைக்
காலுல கொஞ்சுக்கிறதுடா/
சந்தை வளயலும் கையிலே சிணுங்கிக்குதுடா/

ஆமை போல
ஊந்துக்கிட்டே போறாள்/
கால் பட்ட புல்லும் மயங்கி /
படுத்துக்கிட்டு எழுந்து
நிமிர்ந்து பாத்துக்குதடா/

ஆலம் விழுது போலவே
இடையை ஆட்டிக்கிட்டே போறாள் /
ஆம்புள நெஞ்சமெல்லாம் காதல்
குடைய விரிச்சுக் கிட்டே போறாள் /

ஆத்து மேட்டு மேல போறவளே/
ஊத்தெடுக்குது ஆவலும் ஒம் மேலே/

குளத்து நண்டாக நீ ஓடிக்கிரா
பார்த்துக்கிட்ட யென் கண்ணுல /
போதைய ஏத்திக்கிரா/

சோத்துக் கத்தாழ
போல வழுக்கிக்கிரா/
உலுவமீனு போல நழுவிக்கிரா/

காத்தைக் கண்ணுக்கிட்ட
கருமேகமாக மறஞ்சுக்கிரா/
கொம்புத் தேனு நோக்கி ஏங்கிக்கும்/ முடவனாக ஏங்கிக்க வச்சுக்கிரா /

பெருங்காய வாசமாக
எங்கிட்ட பாசம் புள்ள/
கருவாட்டு வாடையாக
நெஞ்சுக்குள்ள நேசம் புள்ள/

சட்டிக்கு ஏத்துக்கிட்ட மூடி
போலும் /
பூட்டுக்கு ஒத்துக்கிட்ட
சாவியாகவும் /
உமக்கு நானும் நல்ல
சோடியாவேன் புள்ள/

இத்துணையும் சொல்லிக்கிட்டேன் /
உம்முணு மூச்சிய வச்சுக்கிட்டு /
ஆத்து மேட்டுல போற அவள் யாரோ ?

தேர்வுக்கு நன்றி ❤🌹🌹🌹

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Nov-19, 11:45 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 81

மேலே