அம்மா

அன்பின் இலக்கணம் நீயே
ஆயிரம் அர்த்தங்கள் தந்தவள் நீயே ...

இன்றும் என்றும் இறைவி நீயே
ஈகை குணத்தில் ஈடில்லா உள்ளம் நீயே ...

உலகத்தில் உன்னைப்போல் யாருமில்லை
ஊரெல்லாம் சுற்றினாலும் உன் கைப்பிடி சோற்றுக்கு ஈடில்லை...

எட்டு வைத்து நடக்கையில் என்னருகில் நின்றவள் நீயே
ஏற்றங்கள் எதுவாயினும் ஏற்றி விட்டவள் நீயே...

ஐ (அரசன்) என ஆனாலும் அலட்டாதவள் நீயே
ஒன்றா இரண்டா நீ செய்த தியாகங்கள்
ஓர் நாளும் மறவேன் நானே...

ஔடதமானாய் பல சமயத்தில்
எஃகு போல் இருந்து என் வாழ்வை
வலிமையாக்கியவள் நீயே
என் தாயே...!!!
என் தாயே...!!!

எழுதியவர் : சுப்ரியா பாலசுப்ரமணியன் (9-Aug-21, 10:52 am)
Tanglish : amma
பார்வை : 285

மேலே