அம்மா அப்பா

அம்மா அப்பா இந்த இரண்டும் வார்த்தைகள் இல்லை
வாழ்க்கை...
திருமணம் முடிந்து சில வருடம் சென்ற பின்
பெண் பிள்ளைகளை கேளுங்கள்
அம்மா அப்பா என்றால் என்ன? என்று .........!!!
அர்த்தம் ஆயிரம்
அழகு ஆயிரம்
அளக்க முடியா அன்பு ஆயிரம் ...!!!
ஆசை ஆசையாய்
ஆனந்தமாய் பார்க்க
ஆளில்லை அவர்களை போல் ...!!!
இன்பம் நிறைந்து
இனிமை நிறைந்து
இசைந்திடும் இருப்பிடம் ...!!!
ஈன்றெடுத்த உங்களுக்கு
ஈடு இணை ஏதுமில்லை ...!!!
உன்னத உறவு
உங்களை போல்
உலகில் இல்லை ...!!!
ஊருக்கு போனாலும்
ஓராயிரம் முறை
யோசிப்பாய் ...!!!
எண்ணியதெல்லாம்
எட்டிவிடும் என்றென்றும்
உங்கள் அருகில் இருந்தால் ...!!!
ஏனென்று கேட்க ஆளில்லை
ஏளனமாய் பார்க்க ஆட்கள் ஏராளம்...!!!
ஓடி ஓடி உழைத்தாய்
ஓடாய் தேய்ந்தாய்
ஓட்டு வீடும் ஓட்டை பானையும் தான் மிச்சம் ...!!!
முழுதாய் சொல்ல முடியவில்லை
தமிழில் வார்த்தைகளுமில்லை..........
எழுத நினைத்து நினைத்து பார்க்கிறேன்
அழுகை தான் ஆர்ப்பரிக்கிறது
உயிரை தந்து
உணவை தந்து
உயர்வை தந்து
உலகம் காட்டி
பாசம் வைத்தாய்
பார்க்க கூட
பாரபட்சம்...!!! பெண்ணாய் பிறந்ததால்...!!!
அன்பில்லாமலும் அருகிலேயே
இருக்கலாம்...!!! ஆணாய் பிறந்ததால்...!!!
இறைவா..!!! இன்னொரு உலகம்
படைத்தால் இந்நிலையை மாற்று..!!!