நீரின் அவசியம் - எனது வரியின் குறள் -1

“செந்நீரும் கண்ணீரும் சிறுநீரு மொரு
தண்ணீரின் தயவின்றி வாழாது”

உணர்த்தும்பொருள்: மனிதன் உடல் உயிர்வாழ மூன்று நீரின் அவசியத்தை இங்கு காண்கிறோம்.


முதலாக((செந்நீர் எனும் குருதி) :
எலும்பும் தசையும் உடன் சேர்ந்து "உரு" ஆகி, அதில் உணர்வை பிரதிபலிக்கும் இரத்த ஓட்டம். “அய்யோ என்று அலறல் சத்தம்; பார்த்தவுடன் பரிதாபத்தை பற்றும் மனிதநேய மனசாட்சியின் நிசப்தமொழி இந்த குரு(தீ)தி.

இரண்டாவதாக கண்ணீர்:
மனித உயிர் உலகில் வாழும்வரை அவன் இன்பத் துன்பங்களை உணர்ச்சிகள் ததும்ப எடுத்துக்காட்டும் கண்ணீர். இதைதான் கவிஞர்கள் "கடல்நீரும் கண்ணீரும் வற்றாது, உன் உயிர் உள்ளவரை" என்று சொல்வார்கள்.

மூன்றாவதாக சிறுநீர்:
மனித உடலில் கழிவுநீர் எனப்படும் இந்நீர் சரிவர வெளியேற்றப்படவில்லை என்றால் இதன் காரணமாக இனம்பெயர் தெரியாத நோய்கள் வந்து தங்கிவிடும் உபாதையாக. இதனால் அவன் தன் இயல்பான உடலின் எதிர்ப்புசக்தி குறைந்து தன ஆயுளை எமனின் கையில், தானே கொடுக்கின்ற சூழ்நிலையையும் நாம் சமூகத்தில் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனவேதான் இந்த மூன்றையும் நாம் சரிவர கவனிக்கவேண்டும் என்பதற்குதான் இதற்கு மூலகாரணமான "நீரை" எப்பொழுதும் நாம் நம் உடலில் மிகுதியான அளவு அருந்த((உட்கொள்ள)வேண்டும் என்னும் அவசியத்தை மீண்டும் உறுதிபடுத்த என்வரிகளில் எழுதியுள்ளேன். மேலே கூறிய மூன்று நீரின் சமச்சீர் நிலையை நாம் பருகும் நீர் பாதுகாப்பதோடு அது நமக்கு நோயில்லா வாழ்வையும் நீண்ட ஆயுளையும் தருகிறது.

"குலமதை காக்க குளமொன்று எடுப்போம்"
"விளைபயிர் வீழ்வதை விரைந்துநாம் காப்போம்";
"மானிடம் மகிழ்வுற மழைநீர் சேர்ப்போம்";
"தண்ணீரின் மந்திரம் இயங்கிடும் மானிடம்"

என்று நம் வாழ்வில் தண்ணீரின் அவசியத்தை அறிந்து செயல்படுவோம் இன்றே புறப்படுவோம்..

எழுதியவர் : ஜாக் .ஜி .ஜெ (27-Dec-14, 9:23 am)
பார்வை : 1878

மேலே