மாணிக்கம்

மாணிக்கம்
என் உணர்வுகளுக்கு புது வண்ணம் தீட்டியவர்
என் தோள்களுக்கு மிஞ்சிய கைக்குழந்தை
இந்த சமூகத்தின் தீண்டலில் இருந்து விலகி வைக்கப்பட்டவர்
இது சாபமா ? வரமா என்று தெரியவில்லை
இந்த உலகம் அவரை மூளை வளர்ச்சி இல்லாதவர் என்றது
அவரால் எதுவுமே புரிந்து கொள்ள முடியாது என்றது
இந்த அறிமுகத்துடன் தான் அவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார்
54 வயது ஆள்....முகத்தில் நரை தாடி...எதுவும் பேச தெரியவில்லை
அவர் பேசியதெல்லாம் ‘அம்மா...வரும்...கார்’ ...
பசி தெரியாது.. வலி தெரியாது
சமூக பணியாளராய் அவரை சந்தித்தேன்
அவர் அண்ணியிடம் அவரை பற்றி தகவல் சேமிதேன்
உள்ளுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம்
எப்படி இவரை சமாளிப்பேன் என்று
இது என்னால் சத்தியமா என்று..
தாயின் ரூபமாகவே ஒரு அண்ணியை கண்டேன்....
குடும்ப வாழ்விற்கு ஒரு புது அர்த்தத்தை கற்று தந்தாள்
அவர்கள் மாணிக்கத்திற்கு பிரியாவிடை தந்தனர்
சலனம் இல்லாமல் சிரித்தார்...
மாணிக்கத்தை கவனித்து கொள்ளும் பொறுப்பு எங்களை வந்தடைந்தது
காலையில் அவர் எழுப்பி பல்லு விளக்கி குளிக்க வைப்பது விஜய் வேலை
பின்பு அவர் நடை பயிற்சிக்கு அழைத்து செல்வது என் வேலை
தெருவில் நடப்பதற்கு அவ்வளவு பயம்
என் கையை இருக்க பிடித்து கொள்வார்
அவரை கார்களை பார்த்தால் மட்டும் குதுகலிப்பார்
என் கை பிடித்து நடக்கையில் எதோ என் பிள்ளைக்கு நடைபயிற்சி சொல்லித்தருவது போல் தோன்றும்
அவருக்கு சாப்பிட கற்றுத்தந்தும் நாங்கள் தான்...சோறு ஊட்டியதும் நாங்கள் தான்
ஒரு நாள் கீழே விழுந்துவிட்டார்...வாய் எல்லாம் ரத்தம்
நான் பதறி அவர் தோள்தொட்டு கண்ணீர் மல்க "என்ன மாணிக்கம் இது' என்று கேட்க ... சிரித்தார்...ரத்தத்தை தொட்டு 'பார்த்தியா' என்று அவர் பானியில் சொல்லிவிட்டு சிரித்தார்... நான் உறைந்து போனேன்...
என் பிள்ளையாகவே அவரை பார்த்தேன்
சில நேரங்களில் தூங்காமல் விழித்திருப்பர்
‘தூங்கு மாணிக்கம்’ என்றால்....என் தலை கோதுவார்...
என் விழி ஓரம் ஒரு துளி நீர் கசியும்
சில நேரம் நான் துவண்டு போகையில்
என் அருகில் வந்து 'அக்கா அக்கா' என்று அழைப்பார்....
என் கரம் தொட்டு என் கண் நோக்குவார்
உள் இருக்கும் அனைத்து சோகமும் உடைந்து சிதறும்
இவரா மூளை வளர்ச்சி இல்லாதவர்
இல்லை...எனக்கு வாழ்க்கையை கற்று தந்தவர்
அதிகாலை முதல் இரவு வரை எங்கள் கவனம் இவர் மீதே இருக்கும்
மாணிக்கம், இன்று உன் பூத உடல் இங்கு இல்லை
இந்த தருணத்தில் உனக்கு என் நன்றிகளை சமர்பிக்கிறேன்
ஒரு ஞானியின் வாழ்க்கையை போதித்தாய்
சந்தோசம் என்பது உன் உள் நிலை....அது எதையும் தேடி ஓடுவது அல்ல என்று உரைத்தாய்
குழந்தை தன்மை மாறாமல் எப்படி வாழ்வது என்று கற்பித்தாய்
இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
உன் வாழ்க்கை பயணத்தில் நானும் ஒரு பயணியாய் சேர்ந்ததுக்கு
சோறு உண்ணும் குழந்தை பிஞ்சு விரலால் தாய்க்கு சோறு ஊட்டும் நேரம் தாய் குழந்தையாகவே மாறுவது போல்...என்னை தாயும் சேயும் ஆகியவரே...
இன்று நீ இல்லை....உன் நினைவுகள் நிறைந்திருகிறது...நீ கற்றுத்தந்த பாடங்கள் நிரம்ப உள்ளது
ஊர் உன் மூளையை சந்தேகம் கொள்ளலாம்....உன்னை நோயாளி என்று சொல்லலாம்.... ஆனால் எனக்கு என்றும் நீங்கள் வாழ்கையை கற்று தந்த ஒரு நல்ல மனிதர்....
இறைவன் நிழலில் நிம்மதியாய் இருங்கள்
நன்றி என்ற ஒற்றை சொல் போதாது
என் நன்றியுடன் சேர்த்து என் விழி நீரையும் சமர்பிகின்றேன்

எழுதியவர் : keerthana (27-Dec-14, 9:25 am)
Tanglish : maanikam
பார்வை : 115

மேலே