ஆத்மதர்சனா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆத்மதர்சனா |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 18-May-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 341 |
புள்ளி | : 32 |
யாதும் ஊரே யாவரும் கேளீர் ... 'key to awareness ' என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர். இந்த புத்தகத்தை பற்றி மேலு தகவல் பெற இந்த லிங்க் சொடுக்கவும்
https://notionpress.com/read/key-to-awareness
https://www.facebook.com/KeytoAwareness/
நீ சாய்ந்த மார்பு
வெறும் கூடு இப்போது.....
நீ கோதிய இரவு
தேய்ந்தது இப்போது....
நீ சுவைத்த இதழ்கள்
காய்ந்தது இப்போது....
நீ அணைத்த துயரம்
தனிமையில் இப்போது...
என் நிழல்
வாழ்ந்த வீட்டில்
அவளின் நிஜம் இப்போது....
என் காதலின் தவிப்பில்
அவள் தாலியின்
சிணுங்கல் இப்போது....
என் கிசுகிசுத்த விசும்பலில்
அவள் கீச்சு சிரிப்பொலி இப்போது
நான் தந்த முத்தத்தில்
அவளின் ஈரம் இப்போது...
நான் திருத்திய மீசையில்
அவளின் கூந்தல் இப்போது...
நம் கூடலின் நினைவில்
அவளின் கர்ப்பம் இப்போது..
நுரை நான்
கடல் அவள்
அகல் விளக்கு நான்
நிலா அவள்
வாசலில் கோலம் நான்
உன் இதய வீட
ஜெயிப்பது
எப்படி என்று
எடுத்துரைத்த
வகுப்புகள் போதும்.....
இனி
தோற்பது எப்படி
என்று சொல்லித்தருவோம்......
அழுதலில்
கிடைக்கும் நிம்மதி
சொல்லி தருவோம்
உதவி கோருவது
தவறில்லை
என்றுரைப்போம்
தவறை
ஒற்றுக்கொள்ளும்
தைரியத்தை போதிப்போம்
100% என்ற
மாயை உடைப்போம்
மனநிறைவு
ஒன்றையே
போற்றுவோம்
தலைக்கு மேலே புதிதாய் தினம் ஒரு வானம்
எனக்கே எனக்கென்று ஒரு இரயில் வண்டி
என் 'உள்'
என்னுள்
நான்.
இரயில் வண்டியின் ஜன்னளுடன் ஒரு உரசல்
நிலவுடன் சமரசம்
இலக்கில்லாத பயணம்
முடிவில்லாத இசை
மனம் யாசிக்கும் இடத்தில்
சிறு உடன்படிக்கை.
அடர்ந்த காடு
என்னை தொலைத்த நானும்
தன்னை தந்த மரமும்
இணைக்கும் இருளும்.
ஏகாந்த ஒளி
ரம்யமாய் ஒலி
ஒரு சொட்டு கண்ணீர்
நெஞ்சம் குழைந்து
உயிர் உருகி
நன்றி பெருகி
மரத்தை என் மனதால் வருடுகிறேன்
இதமாய் அணைக்கின்றேன்
மரத்தின் மடியில் சாய்ந்தேன்
மண் வாசனையில் பூத்தேன்
நானே மரமானேன்
அண்டத்தை உணர்ந்தேன்.
பரவசத்தின் உச்சம்
என
வளர்பிறை
முழு நிலவாகும் நேரம்
என் வானம்
முழுதும் வெளிச்சம்...
நீ
குளிர் நிலவோ
இல்லை
இந்த நிலத்தின்
அதிபனோ
அறியேன்....
அறிந்ததெல்லாம்
இது தான்;
பனிக்குடம்
உடையும் நேரம்
என் வாழ்வு
மீண்டும் துளிர்க்கும்
இருவரும்
சேர்ந்து பிறப்போம்...
உனக்கான தட்டில்
எனக்கான சோறு
மிச்சமிருக்கும்..
உனக்கான கனவில்
எனக்கான வாழ்வு இருக்கும்..
என் இதயத்தில்
உன் காலடி சுவடு இருக்கும்
என் நரை
உன் இளமை
கதை சொல்லும்...
என் விழி
உனக்கான கண்ணீர் சிந்தும்
உன் வெற்றியில்
என் உழைப்பு அடங்கும்
வா!!!
உன் வரவை நோக்கி
என் கவிதையும்
என் கண்ணீரும்
காத்துக்கிடக்கிறத
வாழாத வாழ்க்கையெல்லாம்
மரண படுக்கையில்
வாழ நினைக்கும் ஒரே இனம்
மனித இனம்
யாரும் இங்கு
நிறைவாய் வாழ்வதில்லை
நிறைவாய் இறப்பதில்லை
'யாருக்கோ' உழைத்து
'யாருக்காகவோ' சுயம் இழந்து
'யாருடனோ' முட்டி மோதி
அந்த 'யாரோ' யார் என்றே தெரியாமல்
மரண படுக்கையில்
'தான் யார்?' என்று தேடி
விடை கிடைக்கும் முன்
விடைபெறும்
'விநோதன்'
மனிதன்...
இந்த உலகில் ஒவ்வொரு பொருளும்
ஒவ்வொரு மனிதரும்
எம் ஆசானே....
புல் முதல் சூரியன் வரை
நாற்காலி முதல் கேசம் வரை
அனைத்தும் எம் ஆசானே..
தீயோடு போகும் வரையில்
கற்றல் ஓயாது
கற்பித்தலும் ஓயாது
இது தான் என் கல்வி...
புத்தகங்களுக்குள் என் வாழ்கை இல்லை
இந்த பிரபஞ்சமே என் புத்தகம்
மன்னித்துவிடு
உன் சுயம் தொலைத்து
மதிப்பெண்களின் உன்னை கண்டெடுக்கும் ஆசிரியர் அல்ல நான்
கேள்விகளால்
உன் சுயத்தை துளைப்பவள்
என் கேள்விகள்
உன் காதை
துளைத்துக்கொன்டே இருக்கும்
உன் இதயம் திறக்கும் வரை
உன் சுயம் மலரும் வரை
நான் ஆசிரியை
தோல்விகளை ஒப்புக்கொள்வதில்லை...
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த
தலைக்கு மேலே புதிதாய் தினம் ஒரு வானம்
எனக்கே எனக்கென்று ஒரு இரயில் வண்டி
என் 'உள்'
என்னுள்
நான்.
இரயில் வண்டியின் ஜன்னளுடன் ஒரு உரசல்
நிலவுடன் சமரசம்
இலக்கில்லாத பயணம்
முடிவில்லாத இசை
மனம் யாசிக்கும் இடத்தில்
சிறு உடன்படிக்கை.
அடர்ந்த காடு
என்னை தொலைத்த நானும்
தன்னை தந்த மரமும்
இணைக்கும் இருளும்
ஏகாந்த ஒளி
ரம்யமாய் ஒலி
ஒரு சொட்டு கண்ணீர்
நெஞ்சம் குழைந்து
உயிர் உருகி
நன்றி பெருகி
மரத்தை என் மனதால் வருடுகிறேன்
இதமாய் அணைக்கின்றேன்
மரத்தின் மடியில் சாய்ந்தேன்
மண் வாசனையில் பூத்தேன்
நானே மரமானேன்
அண்டத்தை உணர்ந்தேன்.
பரவசத்தின் உச்சம்
என் பி
கசங்கிய நைட்டியும் கலைந்த முடியும்
உன்னால் ரசிக்க முடியும் எனில் அது தான் காதல்
முத்தம் இடுகையில் துர்நாற்றத்தையும் ரசிக்க முடியுமெனில்
அது தான் காதல்
உப்பில்லாத சாம்பாரையும் தாண்டி அதன் பின் இருக்கும்
உழைப்பை உன்னால் ரசிக்க முடியும் எனில்
அது தான் காதல்
ஒப்பீடுகள் இல்லாமல்
புகுத்தல்கள் இல்லாமல்
உன் மனைவியை ஏற்க முடியும் எனில்
அது தான் காதல்
தவறுகளை சத்தம் போட்டு ஒலிபரப்பாமல்
அணைத்து இதம் தர முடியும் எனில்
அது தான் காதல்
அலுவலகத்தில் இருந்து கசங்கி வரும்போது
இதமாய் தேநீர் தரமுடியும் என்றால்
அது தான் காதல்
நச்சரிப்புகள் இல்லாமல்
கணவனை ஏற்க முடியும் எனில்
அது
எல்லோரும் காதல் தேவதைகளால் ஆசிர்வதிகபடுகிறர்கள்
சிலர் மட்டும் தான் காதல் தேவதைகளால் படைக்கப்படுகிறார்கள்
நீங்கள் காதலுக்கு பிறந்தவர்கள்
இல்லறம் நடந்தேற பணம் போதும்
அது நல்லறமாய் மாற அன்பு வேண்டும்
காதலாகி கசிந்துருகி வாழ்ந்தவர்கள் நீங்கள்
நீங்கள் வாழ்க்கையை மற்றும் பயிற்ருவிக்கவில்லை
காதலையும் சேர்த்து கற்றுதந்தீர்கள்
வள்ளுவன் வாசுகி கண்டதில்லை நாங்கள்
பார்த்து வளர்ந்தது எல்லாம் உங்களை கண்டுதான்
ஆடம்பர பரிசு பொருட்களே காதலின் சின்னம்
என்றானபோது
காதலையே பரிசாய் பரிமாறி வாழ்ந்தவர்கள் நீங்கள்
இருவரும் காதலில் விழுந்தவர்கள் அல்ல
காதலில் எழுந்தவர்கள்
தெருவில் கைகோர்த்து நடந்ததில்லை
மாணிக்கம்
என் உணர்வுகளுக்கு புது வண்ணம் தீட்டியவர்
என் தோள்களுக்கு மிஞ்சிய கைக்குழந்தை
இந்த சமூகத்தின் தீண்டலில் இருந்து விலகி வைக்கப்பட்டவர்
இது சாபமா ? வரமா என்று தெரியவில்லை
இந்த உலகம் அவரை மூளை வளர்ச்சி இல்லாதவர் என்றது
அவரால் எதுவுமே புரிந்து கொள்ள முடியாது என்றது
இந்த அறிமுகத்துடன் தான் அவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார்
54 வயது ஆள்....முகத்தில் நரை தாடி...எதுவும் பேச தெரியவில்லை
அவர் பேசியதெல்லாம் ‘அம்மா...வரும்...கார்’ ...
பசி தெரியாது.. வலி தெரியாது
சமூக பணியாளராய் அவரை சந்தித்தேன்
அவர் அண்ணியிடம் அவரை பற்றி தகவல் சேமிதேன்
உள்ளுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம்
எப்படி இவரை