மரம்

தலைக்கு மேலே புதிதாய் தினம் ஒரு வானம்
எனக்கே எனக்கென்று ஒரு இரயில் வண்டி
என் 'உள்'
என்னுள்
நான்.

இரயில் வண்டியின் ஜன்னளுடன் ஒரு உரசல்
நிலவுடன் சமரசம்
இலக்கில்லாத பயணம்
முடிவில்லாத இசை
மனம் யாசிக்கும் இடத்தில்
சிறு உடன்படிக்கை.

அடர்ந்த காடு
என்னை தொலைத்த நானும்
தன்னை தந்த மரமும்
இணைக்கும் இருளும்
ஏகாந்த ஒளி
ரம்யமாய் ஒலி
ஒரு சொட்டு கண்ணீர்
நெஞ்சம் குழைந்து
உயிர் உருகி
நன்றி பெருகி
மரத்தை என் மனதால் வருடுகிறேன்
இதமாய் அணைக்கின்றேன்
மரத்தின் மடியில் சாய்ந்தேன்
மண் வாசனையில் பூத்தேன்
நானே மரமானேன்
அண்டத்தை உணர்ந்தேன்.

பரவசத்தின் உச்சம்
என் பிறப்பின் மோட்ஷம்
தீரா காதலுடன் எழுகின்றேன்
மறுபடியும் இரயில் நோக்கி
வேறு நிலம்
வேறு வானம்
என் 'உள்'
என்னுள்
நான்
இயற்கையாய் நான்
இயற்கையுடன் நான்.

எழுதியவர் : (6-Jan-16, 11:00 pm)
Tanglish : maram
பார்வை : 78

மேலே