மரண படுக்கை
வாழாத வாழ்க்கையெல்லாம்
மரண படுக்கையில்
வாழ நினைக்கும் ஒரே இனம்
மனித இனம்
யாரும் இங்கு
நிறைவாய் வாழ்வதில்லை
நிறைவாய் இறப்பதில்லை
'யாருக்கோ' உழைத்து
'யாருக்காகவோ' சுயம் இழந்து
'யாருடனோ' முட்டி மோதி
அந்த 'யாரோ' யார் என்றே தெரியாமல்
மரண படுக்கையில்
'தான் யார்?' என்று தேடி
விடை கிடைக்கும் முன்
விடைபெறும்
'விநோதன்'
மனிதன்...