கணவன் மனைவி

பல வீடுகளில்
முதல் குழந்தை பிறக்கும் போது
உடன் சேர்ந்து
'அம்மா' பிறக்கிறாள்
'மனைவி' இறக்கிறாள்
இரண்டாம் பிள்ளை
பிறக்கும் போது
'அம்மா' முதிர்ச்சி அடைகிறாள்
'மருமகள்' இறக்கிறாள்
அதன் பின்பு
அப்பா அம்மா மட்டுமே
வாழ்கிறார்கள்
கணவன் மனைவியை
தொலைத்துவிட்டு...

எழுதியவர் : (16-Jul-17, 8:19 am)
சேர்த்தது : ஆத்மதர்சனா
Tanglish : kanavan manaivi
பார்வை : 113

மேலே