1,2,3,4,5,6,7,8,9,10 - என்னில் இருப்பதும் இறைவனே
1 - ஒரு முகப் படுத்துவோம் மனதை - இனி
2 - இரு வேறு எண்ணங்கள் இல்லை நமக்கு
3 - முக் காலமும் நமக்கடிமை - படைக்கும்
4 - நான் முகனும் நமக்கு நிகர்........!!
5 - ஐம் புலனும் அடக்கி வெல்வோம் - பெற்ற
6 - ஆறு அறிவை அறிந்து கொள்வோம்...!!
7 - எழு மலையானை வணங்கி மார்கழியில்
8 - எட்டுத் திக்கும் அவன் தரிசனம் காண்போம்..!!
9 - நவநீதன் அருள் நமக்கு உண்டு எப்போதும் - ஆ........!!!
10 - பத்து என்று அஞ்சவே வேண்டியதில்லை...!!!!
வாழ்க தமிழ் - வாழ்க வளமுடன்...!!