யார் கடவுள்
காகிதமா கற்சிலையா இல்லை கவர்ந்திழுக்கும் பொற்சிலையா
காசு பண பொக்கிஷமா
பிணி தீர்க்கும் அருமருந்தா
நான் என்ற அகந்தை கடந்து
கண்மூடி விழித்திரு
காயம் மூச்சாக காத்திரு
பொங்கி எழும் பிராவகமாய்
புதிதான உள்ளுணர்வில்
பூரிப்பாய் பூத்திடுவாய்
அமைதியில் அகங்காணும்
ஆழ் மனமே கடவுள் என்றால்
ஆச்சர்யம் ஒன்றுமில்லை!