தந்தையை போற்றி வணங்குவோம்
தந்தையைப் போற்றி வணங்குவோம்
தந்தையின் அன்பிற்கு தரம் பிரிப்பு இல்லை
தன்னை வருத்தி சேர்ந்தோரை மகிழவைக்கும்
தனக்குள் துன்பத்தை மூடிவைத்து இன்முகம் காட்டி
தனது உழைப்பை குடும்ப நலத்திற்கு மட்டும் வைத்து
தனது உழைப்பால் தான் உயர்ந்து வழி காட்டியாகி
தவறு செய்தால் அதை அன்போடு சுட்டிக்காட்டும் பண்பு
தனது உறவைக் கொண்டு அதிகாரம் செய்யும் வேளையில்
தன்னை ஆசானாக பாவித்து அன்பை பொழியும் உன்னதம்
தன்னிகர் இல்லாத இந்த தூய்மையான அன்பை அறிய
தந்தையாக இருந்து வாழ்ந்து பார்த்தால் தான் உணரமுடியும்