சிந்தையில் அவனும் - 2017 சிகரத்தில் இவனும் – 2018,

சிந்தையில் அவனும் - 2017
சிகரத்தில் இவனும் – 2018,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

2017, இன்பம் துன்பம்
இரண்டும் கலந்து
நன்மை தீமை
நாலும் தெரிந்து

அழகும் அறிவும்
அறிந்திட எனக்குள்
நண்பனாய் நீயும்
நடையாய் வந்தாய்..!

தவழும் என்னை
தாங்கியே நீயும்
ஏணியாய் இருந்து
ஏந்தியே வந்தாய்..!

ஒன்றா இரண்டா
ஓராயிரம் என்ற
அனுபவம் தந்து
அனுப்பிட வந்தாய்.!

வளரும் பிள்ளை
வாழ்வை அறிய
இருளாய் மறைய
ஒளியென வந்தாய்..!

உயிரது தரிக்க
உறவது துடிக்க
தேய்பிறை கடந்த
வளர்பிறை நீயே, 2018..!

எழுதியவர் : ஜே பீ ஜாக் (1-Jan-18, 2:24 am)
சேர்த்தது : ஜெபீ ஜாக்
பார்வை : 124

மேலே