அந்தி நேரம்

விடைபெற சில கணம்
பூமிப்பெண்ணை தினம் தினம்
பொற்கரங்களால் ஆலிங்கனம்
ஆதவன் செய்யும் தருணம்
கண்ணுறும் இதை கீழ் வானம்
பூசுமே செந்தூரம்!
பரவும் எங்கும் அந்திநேரம்..
இயற்கையின் அழகோ இலவசம்
பொங்கும் மனதில் பரவசம்
அந்திநேரமோ சில கணமே..
மறைவதில் ஏன் அவசரமே?

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (31-Dec-17, 11:36 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : andhi neram
பார்வை : 126

மேலே