எதை நோக்கி உன் பயணம்

மின்சாரம் தரும்
நிலக்கரியும் தீரும்.
எரிபொருள் தரும்
கச்சா எண்ணையும் தீரும்.

வற்றும் வளங்கள்
வற்றதான் செய்யும்.

அள்ள அள்ள
குறையாமல் இருப்பதற்கு,
அவற்றை அளிப்பது
அட்சய பாத்திரமல்ல.

பணத்தில் மட்டுமா
வேண்டும் சிக்கனம்.
இயற்கை வளத்திலும்
வேண்டும் சிக்கனம்.

வெறும் மாசுவும், தூசுவும்
மட்டும் மிச்சம் வைக்காதே.
உன்
கொள்ளு பேரனுக்காக
கொஞ்சமாவது விட்டு வை.

அனைத்துயிர்க்கும்
வேண்டும் வளம்
அனைத்து காலத்திலும்
வேண்டும் வளம்.

எழுதியவர் : அகரன் (31-Dec-17, 9:23 pm)
சேர்த்தது : அகரன்
பார்வை : 231

மேலே