பாம்பாட்டி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாம்பாட்டி |
இடம் | : |
பிறந்த தேதி | : 02-Dec-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 18 |
வறண்ட பூமி இறந்த கால் நடைகள்
உடல்கள், அங்கும் இங்கும்;
விண்ணைத் தாக்கும் துர்நாற்றம்
மண்ணும் கைவிட்டு சூட்டுவிட
வானமும் பொய்த்தப் பின்
போவதெங்கே என்றுதேம்பி தேம்பி
அழுகிறான்
எடுபடாது போகுமே எந்த பேச்சை பேசினும்
விடுபடாத வீட்டினுள் இருந்ததென்ன ஆவியே
வடுபடாமல் வாழ்வதா வகுந்துவிட்டு போவதா
திருந்திடாத தீயரை என்ன செய்யலாகுமோ.....
உயரமாக ஓங்கி வளர்ந்த மரங்களுடைய பாண்டிய கண்டத்திலே
தேன் குழல் சுற்றி படர்ந்திருக்கும் செழிப்பொடு கூடிய அத்திமரத்திலே
உச்சத்து இருக்கும் பொன் மலர் கண்டு பிடுங்க எண்ணிய வண்ணப் பெண்டு
அங்கு வீற்றிருக்கும் வேலனை கண்டு வேங்கை வேங்கை என்றலறினாலே
-அரவிந்தன்
(கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி பாட்டியற்றல்.)
விளம், மா, விளம், மா, விளம், காய் வரிசை, முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனை )
வாடியே பயிர்கள் வருத்தமோ டழவே
--------வான்துளி மண்ணிறங்கித்
தேடியே பயிர்க்கால் பாய்ந்திடத் துளிர்க்கும்
-----------தினம்தினம் வயலதிலே
ஓடியே வரும்பாற் கீரிகள் முயல்கள்
-----------உறங்கிட நிழல்தேடி
நாடியே வந்து பெண்குயில் பாட
----------- நடமிடு வாய்மயிலே..!
.
..
கீரிகளில் ஒருவகை பாற்கீரி ( பால் கீரி ) சிறிது வெண்மை கலந்திருக்கும்
கூந்தலை வலைபோல் பிண்ணி
மார்பின் மீது போட்டுக்கொண்டு
கண்களைக் களி நடனமாடும்
கயல்களாய்க் கொண்டு
யாரைப் பிடிக்கக் காத்திருக்கிறாளென்று
எட்டிப் பார்த்தேன்.
எப்படி விழுந்தேன் என தெரியாமல்
விழுந்தபின் எழுந்து வந்தேன்
என் மனதை அந்த
வலையிலேயே விட்டுவிட்டு.
என்னிடம் சொல்லிக் கொள்ளாமல்
உன் கண்ணீர் துளிகள், எங்கே அவசரமாக கீழிறங்குகின்றன
என்னிடம் எதை பிடிக்காமல்
உன் கருவிழிகள், அந்த பக்கம் திரும்பி கொண்டன
என்னிடம் எது பிடித்ததென்று
அதே விழிகள் என்னை ஓரமாய் பார்த்து ஜாடை பேசுகின்றன
என்னிடம் நீ உள்ளாய்
என்ற உன் இதழ்வாய், எதனால் கோபித்து சிலும்புகின்றன
என்னிடம் இதுவரை தான் நீ
என்று எதுவரை எல்லை விதித்தாயோ ,
அந்த எல்லையை காதல் அறியாதே........ என் காதலி
அறத்தினில் பிறந்து
அகத்தினில் வளர்ந்து
பொய்மைகளை புறங்கண்டு
செம்மொழியாய் உயர்ந்தவளே
என் தமிழே எனதுயிரே
நின் பாதம் பணிந்தேனே
மந்திர விழியாள் மந்திரம் உருட்டி
சுந்தரி சிரித்தாள் எனை மயக்க
எந்தர மாளுநல் தந்திர குறியாள்
முன் தின பார்வையில் எமையாண்டால்.
ஆண்டாள் எமையவள் செயலாள் தினஞ்சிறு
சான்றாய் சிறு இதழ் விரித்தாளே
மாண்டேன் ஐயோ மடையன் தையால்
மாரணிச் சீருடை வளைவாலே
பொய்யேன் பொழிந்தேன் பொய்யாய் உரைத்தேன்
மையாள் விழியில் மயங்கேனே - ஐயோ
மறந்தேன் தனையோ இழந்தேன், எனையோ
குழப்பினள் அவள் விழியாளே