வலையில் மாட்டியவன்

கூந்தலை வலைபோல் பிண்ணி
மார்பின் மீது போட்டுக்கொண்டு
கண்களைக் களி நடனமாடும்
கயல்களாய்க் கொண்டு
யாரைப் பிடிக்கக் காத்திருக்கிறாளென்று
எட்டிப் பார்த்தேன்.
எப்படி விழுந்தேன் என தெரியாமல்
விழுந்தபின் எழுந்து வந்தேன்
என் மனதை அந்த
வலையிலேயே விட்டுவிட்டு.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (21-Nov-16, 9:53 am)
பார்வை : 122

மேலே