ஊடல் பொழுதுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னிடம் சொல்லிக் கொள்ளாமல்
உன் கண்ணீர் துளிகள், எங்கே அவசரமாக கீழிறங்குகின்றன
என்னிடம் எதை பிடிக்காமல்
உன் கருவிழிகள், அந்த பக்கம் திரும்பி கொண்டன
என்னிடம் எது பிடித்ததென்று
அதே விழிகள் என்னை ஓரமாய் பார்த்து ஜாடை பேசுகின்றன
என்னிடம் நீ உள்ளாய்
என்ற உன் இதழ்வாய், எதனால் கோபித்து சிலும்புகின்றன
என்னிடம் இதுவரை தான் நீ
என்று எதுவரை எல்லை விதித்தாயோ ,
அந்த எல்லையை காதல் அறியாதே........ என் காதலி