வறட்சி,ஏக்கத்தில் விவசாயி,ஆண்டவன் தரும் வரம்

வறண்ட பூமி இறந்த கால் நடைகள்
உடல்கள், அங்கும் இங்கும்;
விண்ணைத் தாக்கும் துர்நாற்றம்
மண்ணும் கைவிட்டு சூட்டுவிட
வானமும் பொய்த்தப் பின்
போவதெங்கே என்றுதேம்பி தேம்பி
அழுகிறான் ஏழை விவசாயீ
ஆயினும் அவன் தன
குலதெய்வம் கைவிடாது என்ற
நம்பிக்கையில் மழைக்காய்
அதோ தன ஊர் காவல் தெய்வம்
முன் துணிவிரித்து மலைப்பிச்சை
மனமுருக கேட்டு அழுகிறான்


எங்கோ மண் வாடை
காற்று ஏந்தி வருகிறது
மூடிய வானம் ,இடி ஓசை கேக்குது
கொடிமின்னல் .............

மழைத்துளி ,மழைத்துளி
மழைத்துளி, மழைத்துளி
வானம் பொய்க்கவில்லை
கடவுள் தூங்கவில்லை
உன் தொழுகைக்கு
கடவுள் தரும் வரம்
இதோ இப்போது வீச இருக்கும்
மழை! கலங்கிடாதே விவசாயி
மழை உன் மனதை நனைத்துவிடும்
உன்னை என்னையும் வாழவிடும்

சத்தியத்தை(கடவுள்)என்றும்
மறந்து விடாதே
உன் கடமைகளையும் மறந்திடாதே
உழைப்பில் நம்பிக்கை வைத்திடு
அந்த ஆண்டவனை நம்பி வாழ்ந்திடு
உயர்வே உனக்கு என்றும்
நிமிர்ந்து நடந்திடு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-May-17, 10:32 am)
பார்வை : 136

மேலே