குழப்பத்தின் குலமகள்

மந்திர விழியாள் மந்திரம் உருட்டி
சுந்தரி சிரித்தாள் எனை மயக்க
எந்தர மாளுநல் தந்திர குறியாள்
முன் தின பார்வையில் எமையாண்டால்.

ஆண்டாள் எமையவள் செயலாள் தினஞ்சிறு
சான்றாய் சிறு இதழ் விரித்தாளே
மாண்டேன் ஐயோ மடையன் தையால்
மாரணிச் சீருடை வளைவாலே

பொய்யேன் பொழிந்தேன் பொய்யாய் உரைத்தேன்
மையாள் விழியில் மயங்கேனே - ஐயோ
மறந்தேன் தனையோ இழந்தேன், எனையோ
குழப்பினள் அவள் விழியாளே

எழுதியவர் : அரவிந் (16-Nov-16, 7:17 pm)
சேர்த்தது : பாம்பாட்டி
பார்வை : 118

மேலே