சங்கீதாஇந்திரா - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  சங்கீதாஇந்திரா
இடம்:  பட்டுக்கோட்டை
பிறந்த தேதி :  18-Jul-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Oct-2013
பார்த்தவர்கள்:  5972
புள்ளி:  344

என்னைப் பற்றி...

தாய் தந்தை என் முதல் கடவுள். தாய் அன்புக்கு நான் அடிமை என் அன்புக்கு அவள் அடிமை....என் தந்தை எனக்கு நண்பன் போல....செல்ல செல்ல சண்டை போட்டாலும் அதிக அன்புடன் என் அண்ணன்...
கவிதை படிப்பது தான் பிடிக்கும். ஆனால் இப்போது கொஞ்சம் கவிதை எழுத பிடிக்கும்.

என் படைப்புகள்
சங்கீதாஇந்திரா செய்திகள்
சங்கீதாஇந்திரா - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jun-2023 8:12 pm

காதலித்து மணம் புரிந்தோர்
கசப்பான சூழலில் பிரிவது
கலியுகக் காட்சிகளில் ஒன்று !

பெரியோர் முடித்த திருமணம்
சிறியதோர் நிகழ்வு சச்சரவாகி
பிரிகின்றார் நவீன காலத்தில் !

விவாகம் முடிந்த வினாடிகளில்
விவாக ரத்துக்காக அலையும்
வினோதம் நிகழும் காலமிது !

திருமணம் முடிந்த சிலகாலம்
இல்லறம் நடத்தும் தம்பதியர்
துறவறம் ஏற்பதும் இக்காலம் !

இணைந்து வாழ்பவர் பிரிந்து
தவிக்கும் பிள்ளைகளை மறந்து
திருமணம் புரிவதும் எதற்காக ?

புரியாத புதிராக புரிதலின்மை
அறியாத மனங்கள் பரிதவிப்பு
நாளும் காணும் காட்சியானது !

மணம் முடித்தோர் சிந்திக்க
முடித்து வைப்போர் கவனிக்க
காதல் மனங்கள் இணந்திருக்க

மனம்விட்டு

மேலும்

மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு பாராட்டுக்கு 20-Jun-2023 5:18 pm
அருமை இன்றைய காலத்துக்கு ஏற்ற கவி... 20-Jun-2023 5:07 pm
சங்கீதாஇந்திரா - பழனி குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Sep-2021 7:08 am

நேற்று என்பது 

இன்று இல்லை...
இன்று என்பது 
நாளை இல்லை ...
நாளை என்பது 
நிச்சயம் இல்லை...

நேற்று வாழ்ந்தோம் 
இன்று வாழ்கிறோம் 
நாளை.... அறியோம் !

இதுதான் வாழ்க்கையின் 
நிரந்தர கால அட்டவணை !

பிறந்தோம் இறந்தோம் 
வந்தோம் சென்றோம் 
என்று இல்லாமல் 

வாழ்ந்துக் காட்டினோம் 
வாழ்க்கையில் சாதித்தோம் 
என்பதே ,
அர்த்தமுள்ள வாழ்க்கை 
அசாதாரண வாழ்க்கை 
அவசியமான வாழ்க்கை !

நாம் மறைந்தாலும் 
நம் தடயங்கள் மறையாது 
தலைமுறை மறக்காது !

நல் விடியலாகட்டும் !

பழனி குமார்  

மேலும்

மிக்க நன்றி 15-Sep-2021 8:24 pm
இது தான் வாழ்க்கை சூப்பர்.. 15-Sep-2021 7:24 pm
சங்கீதாஇந்திரா - ர கீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2019 8:07 pm

கதை எழுதவோ கவிதை எழுதவோ - நான்
வரவில்லை - என் கனவை நினைவாக்க வழியற்று
நிற்பேன் என்றும் நினைக்கவில்லை ...

வலிகள் இருந்தும் அதைப் போக்க
வழிகள் இல்லை ... கிடைத்தும் - அதை
துப்பறிந்து வதைக்க முடியவில்லை - இயலவில்லை....

பாடலுக்குரிய கவி வரிகள் கிடைத்தும் - பாடி
முடித்திட ராகம் கிடைக்கவில்லை - ராகம்
கிடைத்தும் பாடிட பாடகர் இல்லை ...

வெயிலில் வெப்பம் இல்லை - மழைக்
காற்றில் மண் வாசம் இல்லை - பனியில்
குளிர் இல்லை - ஆடும்
மயிலில் அழகு இல்லை ...

என்னுள் நான் இல்லை - மனதில்
மகிழ்ச்சி இல்லை இருந்தும் - நம்பிக்கை
குறையவில்லை - ஆகையால்
என்றும் வீழ்ச்சி இல்லை .....!!!

மேலும்

மிகவும் மனவாட்டத்தில் உள்ளதாய் கவிதை வெளிப்படுத்துகிறது. நிற்க, கவிதை எழுதும் சிந்தனை திறன் படைத்தோர் இளகிய மனமுள்ளோராய் இருத்தலே இயல்பு எனவே, பண்பட்டு பலசாலி ஆக வாழ்த்துகிறேன். கவிதை சிறப்பு. 12-Feb-2019 8:58 pm
நன்றாக உள்ளது 👌 12-Feb-2019 8:38 pm

Anaivarukkum advance happy new year...

மேலும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே.... 01-Jan-2015 9:30 am
ஷர்மா அளித்த படைப்பை (public) ரமேஷா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Nov-2014 7:22 pm

----------உயிர்த்தெழுவாய் என்ற நம்பிக்கையில்------------------

நீள வானின் பள்ளதாக்குகளில்
நிலவை தொலைத்து அதை
தேடும் மேகமாய்..

நெட்டை இரவில் தன்
துணையை தேடும்
குட்டை தவளையாய்..

பழங்கள் இல்லா மரத்தை
பலமுறை சுற்றும்
பழந்திண்ணி வௌவாலாய்...

இந் நிறம் அறிய நிழல்களில்
உன் நினைவலைகளை
தேடி அலைகிறேன் என்னவனே...!

அன்று என் மடி சாய்ந்து
நீ எண்ணிய விண்மீனும்
மீண்டும் வான் வந்தது ..

நீ சுவாசித்து நேசித்து
கவி சொன்ன தென்றலும்
இதோ கண்முன் வந்தது..

நீ எங்கே என் அன்பானவனே..?

குளத்து தாமரையின் அழகு
வெளியே மிதந்தாலும்
அதன் வேர் அழுக்கு சகதியில் தானே..!

உன் கண்களுக்காய் நான

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பா..வருகைக்கும் புரிதலுக்கும் 02-Dec-2014 10:39 am
மிக்க மகிழ்ச்சி நட்பே...வருகைக்கும் புரிதலுக்கும் 02-Dec-2014 10:38 am
ஆம் தோழி...... வருகைக்கும் இரசனைக்கும் மிக்க மகிழ்ச்சி தோழி... 02-Dec-2014 10:37 am
மிக்க மகிழ்ச்சி தோழரே..... 02-Dec-2014 10:37 am
சங்கீதாஇந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2014 12:59 pm

(வாழ்த்தலாம் வாங்க 07.09.2014 அன்று பிறந்த நாள் காணும் என் தோழி தாமரைக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....)

வலிமை மிக்க வரிகளால் எனக்கு
வாழ்த்து சொல்ல தெரியவில்லை....

இருந்தும் உனக்கு வாழ்த்து
சொல்ல என் மனம் துடிக்கிறது...

பூக்களை தூதாக அனுப்பி
உனக்கு வாழ்த்து சொல்லலாம்
என்று நினைத்தால் அது முடியவில்லை...

ஏனென்றால் பூவின் பெயரை கொண்ட
உனக்கு எப்படி ஒரு பூவை தூதாக
அனுப்புவது என்று என் மனம் புலம்பியது...

அதனால் தான் உன்னை சுமக்கும்
என் மனதில் உனக்கான வாழ்த்தையும்
சுமந்து கொண்டு வாழ்த்து சொல்ல இங்கு வந்துள்ளேன்...

நான் உன் மீது கொண்ட அன்பு
காலையில் தோன்றி

மேலும்

மிக்க நன்றி தோழா... 10-Sep-2014 6:59 am
இனி பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி தாமரைக்கு படைப்பு அழகு ! 09-Sep-2014 10:19 am
மிக்க நன்றி தோழா... 09-Sep-2014 6:52 am
தோழி தாமரைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... தோழி சங்கீதாவுக்கும் வாழ்த்துக்கள்... 08-Sep-2014 9:49 pm
அராகவன் அளித்த படைப்பை (public) அராகவன் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Sep-2014 2:16 am

சேய் தாங்கும் தாயின் முந்தானை அழுத்தமாக சொல்கிறது,,,,,,,
நானில்லை, இந்த சுமைக்கு சும்மாடு தாய்ப்பாசமே!!!!!!!!!!!!!!!

மேலும்

சங்கீதாஇந்திரா - ர த க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2014 12:21 pm

ஒரு ஊரில் இரு காதலர்கள் காதலித்து
திருமணம் செய்து கொண்டார்கள்.

அவர்கள் இரண்டு மூன்று வருடங்கள்
சந்தோஷமாக தான் வாழ்ந்தார்கள்...

ஆனால் ஒரு நாள் தன் சுதந்திரத்தை
பறிப்பதாய் கூறி கணவன் தன்
மனைவியுடன் சண்டை பிடித்து
அவளை வார்த்தையால் காயப்படுத்தி விட்டு
வேறொரு ஊரில் தனியே வாழத்தொடங்கினான்...

ஒரு நாளும் பிரிவு என்ற சொல்லை தாங்காத மனைவி தவிப்புற்றாள்...ஒருவழியாக கணவன் இருக்கும் இடத்தை
அறிந்து கொண்ட அவள்... எப்படியும் தன்னை தன் கணவன் பார்க்க விரும்பமாட்டான் என எண்ணிக்கொண்டு
கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தாள்.

" உங்களை கட்டாயம் ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும்...
உங்கள் பிரிவை என்னால் தா

மேலும்

நன்றி அண்ணா..:):) 09-Sep-2014 11:26 am
படைப்பு வெகு அருமை.. 08-Sep-2014 10:30 pm
புரிஞ்ச சரி .:):) 03-Sep-2014 4:19 pm
இது புகழ்ச்சியா அண்ணா...!!!!! சரி .. சரி...:-) :-) 03-Sep-2014 4:15 pm
சங்கீதாஇந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 8:26 am

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...

பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....

கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....

அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...

பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....

பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...

அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் க

மேலும்

Neengal solvathum unmaithan natpe...mikka nandri natpe... 31-Dec-2014 8:09 pm
ஆண்கள் மட்டுமே காரணமல்ல, பெண்ணும்தான். 31-Dec-2014 4:32 pm
ஒரு ஆதங்கம் தான் இப்படி எழுத வைத்தது......பெண்களின் கற்புக்கு ஆண்கள் தானே பாதுகாப்பு கொடுக்கணும்.....அழிப்பதும் பாதுகாப்பதும் அவர்கள் கையில் தான் உள்ளது அதனால் தான் அப்படி கூறியுள்ளேன்..எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தாது இது போல இருப்பவர்களுக்கு மட்டுமே..... 15-Oct-2014 11:14 am
தலைப்பு செய்திகளில் வரும் சில தலையங்கங்களை படிப்பது போல உள்ளது.... காமவெறி பிடித்த ஆண் ஆதிக்கமே பெண்ணை வாழ விடு அவர்களின் கற்புக்கு பாதுகாப்பு கொடு.. ஆண்களை காமவெறியர்கள் என்று கூறி விட்டு ... அவர்களிடமே பாதுகாப்பு கேட்பது முரண்பாடாக உள்ளது.... ஆண்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல... 13-Oct-2014 10:03 pm
சங்கீதாஇந்திரா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2014 9:02 pm

(ஓடிப் போன பெண்ணை நினைத்து ஒரு தாயின் கதறல்....)

நீ என்னில் உருவெடுத்த போது
என் உள்ளமெல்லாம் எல்லை
இல்லா மகிழ்ச்சி....

நொடிக்கு ஒரு முறை நான்
கஷ்ட பட்டாலும் என் தங்கமே
நீ என்னுடன் இருப்பதை
நினைத்து நான் சந்தோஷப்பட்டேனடி...

என் செல்லமே உன்னால் தானடி
நான் தாய்மை என்னும் பட்டதைப் பெற்றேன்...

நான் பத்து மாதம் சுமந்து
பெற்றெடுத்த பத்தர மாத்து
தங்கம் நீ தானடி...

சுமை கூட சுகம் தானடி
உன்னை சுமந்த தாய் எனக்கு....

என் செல்லமே நான் புரண்டு
படுத்தால் நீ கலைந்து விடுவாயோ
என்று கண் விழித்து உன்னை காத்தேனடி...

பிறந்தது பெண்ணா என்று
பெருமை கொள்ளாத உறவுக்கு
மத்தியில் உன்னை ப

மேலும்

Mikka nandri natpe... 21-Dec-2014 3:41 pm
Unmaithan natpe...mikka nandri... 21-Dec-2014 3:41 pm
கருவறை பூவாய் சுமந்து இரவும் பகலும் நித்திரை இன்றிகடன் வங்கி படிக்கச் வச்சு கல்யாணம் பொருள் சேர்த்து நெஞ்சுக்குள் அசை வைத்து நிறை குடமாய் அலம்பிய மகிழ்வை கொட்டி போகும் கல்லாய் போகும் வயற்றில் மிதித்த பிஞ்சு நஞ்சு ஆகி போனாலே பெற்ற மனம் மனம் தாங்குமா...........பிள்ளைகள் அறிவாரா.........!!!!!!!!! 21-Dec-2014 12:17 pm
உண்மை தான் , 24-Nov-2014 11:00 am
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பை (public) றிகாஸ் மற்றும் 15 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
28-Jun-2014 8:49 am

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பி

மேலும்

நிரந்தரம் என்பது இல்லை என்பதை உணர்த்துகிறது. எதிலும் பற்றற்று வாழச் சொல்கிறது! 09-Jul-2016 12:31 pm
வருந்துகிறேன். கலங்காதீர்கள் காலம் மாறும்........... 15-Jul-2015 1:47 pm
இரவும் பகலும் நம் வாழ்வில் வரும். கீதாசாரம் உன் வாழ்வில் துணை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 11-Jul-2015 2:54 pm
நவீன விஞ்ஞான உலக கவிதாயினியே, தொடரட்டும் உன் கவிதை சாரல்துளிகள் .தென்றல் வீச என் வாழ்த்துக்கள் 11-Jul-2015 2:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (238)

சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
துரைப்பாண்டிய மூர்த்தி

துரைப்பாண்டிய மூர்த்தி

தற்போது பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (238)

சிவா

சிவா

Malaysia
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
கவியுகன்

கவியுகன்

PDKT .chennai

இவரை பின்தொடர்பவர்கள் (239)

lakshmi777

lakshmi777

tirunelveli
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
user photo

RBALUS

ஹோசூர்

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே