அவளின் மரணம்

(நான் ஒரு அலுவகத்தில் வேலை பார்க்கிறேன் அதே அலுவகத்தில் ஒரு உயர் அதிகாரியாக வேலை பார்ப்பவர் பெயர் ஷீபா. கடந்த 6 மாதங்களாக நான் அவர்களுக்கு கீழ் பணி புரிந்து வருகிறேன். ஒரு நல்ல அதிகாரி அறிவு, திறமை, அன்பு, அழகு, பண்பு, பணிவு எல்லாம் நிறைந்த ஒரு பெண். எதிர்பாரத விதமாய் விபத்தில் உயிர் இழந்து விட்டார். அவர் இறந்த நாள்[13.05.2014].)

பூக்கள் கூட கெஞ்சுமடி
உன் புன்னகையை எனக்கும்
கொஞ்சம் கொடு என்று...

பூக்கும் மலர்கள் கூட
குறிப்பிட்ட நேரத்தில் வாடி விடும்
ஆனால் உன் முகமோ
வாடாத பூ தானடி...

விவேகம் என்னும் வார்த்தையின்
அர்த்தத்தை உன்னிடம் தான் கற்றேனடி...

சுறுசுறுப்பு என்பதை எறும்பிடம்
இருந்துதான் கற்று கொள்ள
வேண்டும் என்பார்கள்...

இல்லை இல்லை அதை
உன்னிடம் இருந்துதான்
கற்று கொள்ள வேண்டுமடி...

உன் நீண்ட கூந்தல்
அழகை கண்டு உனக்கு
தெரியாமல் ரசித்ததுண்டு...

உன் பொன்னான நடை கண்டு
ஒரு பெண்ணான நானே ரசித்தேனடி...

உனக்காக நான் அழ வேண்டும்
என்று நினைத்து தான்
உன் அருகில் என்னை அழைத்தாயோ!...

உனக்கு விபத்து என்று
கேட்டதும் என் வார்த்தைகள்
ஊமை ஆனது...

கண்களில் மட்டும் ஏனோ
கண்ணீர் கரை புரண்டது...

நீ குணமாகி திரும்பி வருவாய்
என்ற நம்பிக்கையில் நான்..

உன் வரவை என்னி என் கண்கள்
காத்திருக்க என்னை ஏமாற்றி
செல்ல உன்னால் எப்படி முடிந்தது...

அந்த நொடி தான் தெரிந்து
கொண்டேன் கடவுளுக்கு கூட
கண் இல்லை என்று...

உனக்கு ஒரு பிள்ளை
இல்லை என்று ஒவ்வொரு
நொடியும் நீ ஏங்கியதுண்டு...

உன் பிள்ளை தான் உனக்கு
கொல்லி போடும் என்று
ஆசையாய் சொன்னாயடி...

ஆனால் மண்ணால் கட்டியதால்
என்னவோ உன் ஆசையை
மரணம் என்னும் மழை
வந்து கரைத்து விட்டதடி...

நீ ஆசை ஆசையாய் வாங்கிய
வீட்டில் இன்று உன் பொய்யான
நிழல்கள் மட்டுமே வாழுதடி...

எனக்கு மூத்தவளாய் பிறந்ததால்
என்னவோ எனக்கு முன்பாகவே
போய்விட்டாயடி..

ஒரு நொடி கூட நினைத்திருக்க
மாட்டாயடி நீ இறந்து போவாய் என்று...

உன்னை பிடிக்காதவர் எவரும்
இல்லை இங்கு அதனால் தான்
என்னவோ எமனுக்கும் உன்னை
பிடித்து விட்டதடி...

நீ இறந்து விட்டாய் என்பதை
நான் மறுக்கிறேனடி...ஆனால்

என் மனமோ அதை ஏற்றுக்
கொண்டு உன் நினைவோடு
வாழத் தொடங்கி விட்டதடி...

"என்றும் அழியாத உன் நினைவுகளுடன் நான்"

(அன்புள்ள தோழிகளே தோழர்களே அவருடைய ஆத்ம சாந்தி அடைய
எல்லோரும் எனக்காக கடவுளை பிராத்தனை செய்யுங்கள்...)

எழுதியவர் : சங்கீதாஇந்திரா (28-Jun-14, 8:49 am)
Tanglish : avalin maranam
பார்வை : 10018

சிறந்த கவிதைகள்

மேலே