கற்புக்கு சுதந்திரம் கிடைக்குமா

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...

பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....

கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....

அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...

பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....

பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...

அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் கொதிக்கிறது...என்னால்
என்ன செய்ய முடியும் நானும் ஒரு பெண்தானே.....

பெண் குழந்தையை பெற்றெடுக்க
ஒரு பெண்ணான தாயே அச்சப்படும்
அளவுக்கு இந்த சமுதாயத்தை
ஆக்கிவிட்டது காம வெறிபிடித்தவனின் ஆசையானது.....

அப்பா மகள் உறவு
அண்ணன் தங்கை உறவு
அக்கா தம்பி உறவு.....

இப்படியே தொடர்ந்தால் இந்த உறவின்
அர்த்தம் மாறிவிடுமோ பயமாய் இருக்கிறது....

பெண்ணின் கற்புக்கு சுதந்திரம்
கிடைப்பது எப்போது?...

இது நீடித்தால் பெண்ணின்
நிலைமை தான் என்ன?...
அவர்களின் எதிர்காலம்
கேள்விக்குறிதான்?...

காமவெறி பிடித்த ஆண் ஆதிக்கமே
பெண்ணை வாழ விடு
அவர்களின் கற்புக்கு பாதுகாப்பு கொடு...

(மன வர்த்ததுடன் நான்)

எழுதியவர் : சங்கீதா இந்திரா (14-Aug-14, 8:26 am)
பார்வை : 491

மேலே