நானாக நான் இல்லை

கதை எழுதவோ கவிதை எழுதவோ - நான்
வரவில்லை - என் கனவை நினைவாக்க வழியற்று
நிற்பேன் என்றும் நினைக்கவில்லை ...

வலிகள் இருந்தும் அதைப் போக்க
வழிகள் இல்லை ... கிடைத்தும் - அதை
துப்பறிந்து வதைக்க முடியவில்லை - இயலவில்லை....

பாடலுக்குரிய கவி வரிகள் கிடைத்தும் - பாடி
முடித்திட ராகம் கிடைக்கவில்லை - ராகம்
கிடைத்தும் பாடிட பாடகர் இல்லை ...

வெயிலில் வெப்பம் இல்லை - மழைக்
காற்றில் மண் வாசம் இல்லை - பனியில்
குளிர் இல்லை - ஆடும்
மயிலில் அழகு இல்லை ...

என்னுள் நான் இல்லை - மனதில்
மகிழ்ச்சி இல்லை இருந்தும் - நம்பிக்கை
குறையவில்லை - ஆகையால்
என்றும் வீழ்ச்சி இல்லை .....!!!
பிழை ஏதும் இருப்பின் மன்னிக்கவும் ...... மூன்று ஆண்டுக்கு பின் நான் எழுதும் முதல் கவிதை இது .... கருத்துக்களை வரவேற்கிறேன்

எழுதியவர் : ர.கீர்த்தனா (12-Feb-19, 8:07 pm)
சேர்த்தது : ர கீர்த்தனா
பார்வை : 461

மேலே