அராகவன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அராகவன் |
இடம் | : பட்டுக்கோட்டை |
பிறந்த தேதி | : 10-Jan-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 2 |
இயற்கை எழிலிங்கே வழிகிறது
--- இரவாகிட மாலைவேளை விரைகிறது !
கார்மேகம் விண்ணில் நிறைந்தது
--- கண்குளிர் காணொளிக் காட்சியானது !
சுகமாகும் குன்றிய இதயங்களும்
--- சுயநலமும் மறந்திடும் சூழலால் !
திரும்பிடும் மேய்ந்திட்ட பசுசிசுக்கள்
--- விரும்பிடும் சாய்ந்திட்ட பொழுதிது !
இல்லத்தில் பணிகள்பல இருந்தாலும்
--- இல்லாமல் ஓய்வாய் ஒருபொழுதும்
இல்லத்திற்கு கால்நடையை கவனமாய்
--- இல்லத்தரசி அழைத்துவரும் காட்சியிது !
விழுந்திடும் சாரல்களும் அதிகமானால்
--- பொழிந்திடும் மழையும் கூடுமென்பதால்
ஐந்தறிவு உயிர்களும் நனையுமென்று
--- தாயுள்ளம் நடைபோடுகிறது வேகமுடனே !
அன்பினை கா
சேய் தாங்கும் தாயின் முந்தானை அழுத்தமாக சொல்கிறது,,,,,,,
நானில்லை, இந்த சுமைக்கு சும்மாடு தாய்ப்பாசமே!!!!!!!!!!!!!!!
நிலவுடன் பொடிநடையிட்டுப் பேசிப்பழக,
அவள் வரும்வழி நோக்கி
காதலைத் தேக்கி காத்திருக்கிறேன்,,,,,,,,,
வான வீதிகளில் நிலவின்
நடைபாதையில்..........
சேய் தாங்கும் தாயின் முந்தானை அழுத்தமாக சொல்கிறது,,,,,,,
நானில்லை, இந்த சுமைக்கு சும்மாடு தாய்ப்பாசமே!!!!!!!!!!!!!!!
மாச்சரியங்கள் மூழ்கடிக்க
---ஆச்சர்யங்கள் முளைக்கிறது
தாத்பரியங்கள் அறியாமலேயே
----சாத்வீகம் சாணக்கியமாகிறது!
நட்பேந்திய நெஞ்சுக்குள்
---நெருஞ்சியொன்று தைக்குது
தையலின் தயவுகளில்
---மையலாகிறது மனது!
மகராலயப் பேரலைகள்
---மதர்த்த நினைவிலடிக்குது
மதுரத் தேனோடைகள்
---எதார்த்தமாய் பாய்கிறது!
வங்கண வசியங்களில்
---பிரம்மச்சரியம் வழுவுகிறது
இங்ஙனம் வாழுங்கால்
---வாமனமும் வான்தொடுது!
பங்கயம் இதழ்மலர்ந்து
---பாயிரம் படிக்குது
பந்தமும் கொண்டாடிட
---பரிசமிட துடிக்குது!
எங்ஙனம் மறைத்தாலும்
---எனதாசை வெடிக்குது
வசந்த அழைப்புகளில்
---என்மனம் சிரிக்குது!
கண்ணிரண்டில் காதலுடன் காத்திருக்கும் கட்டழகி
கண்டாங்கி கட்டிக் கவர்ந்திடுவாள் - எண்ணற்ற
கற்பனைகள் நெஞ்சிலாடக் கால்கடுக்க நின்றிருக்கும்
கற்பிற் சிறந்தவள் காண் .
செஞ்சாந்து பொட்டுவைத்து செவ்வரளிப் பூத்தொடுத்து
கெஞ்சுவிழிப் பார்வையால் கிள்ளினாய் -மஞ்சுளமே
முத்துநகைப் போட்டவளே முல்லைப்பூ வைத்தவளே
சித்திரமே பெண்ணே சிரி .
பூக்கூடை மெல்லிடையில் புன்முறுவல் பூத்தபடி
ஏக்கமுடன் பார்த்தல் எவருக்காய் ?- சீக்கிரமே
வாரானோ காக்கவே வைப்பானோ அன்றியும்
சேரானோ உன்னைச் செப்பு .
கடிதம் வருமெனக் காத்திருந்து மெல்லத்
துடிக்கும் இதயத்தைத் தேற்றி - அடித்த
மணியோசைக் கேட்டு மலரை, சிலை
அன்பு எழுத்து தள நண்பர்களுக்கு ,
இன்றோடு நான் தளத்தில் அடிபதித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தன . மிக்க மகிழ்ச்சி.
கவிதை எழுதும் பழக்கம் இருந்தாலும் , இங்கு வருவதற்கு முன்னரே 200 கவிதைகள் மேல் எழுதி இருந்தாலும் , சேமிப்பிலும் இல்லை ...தாள்களிலும் இல்லை...அந்த எண்ணமும் அப்போது தோன்றவும் இல்லை .
உண்மையில் நான் எண்ணிக்கையில் பார்த்தால் 1000 கவிதைகள் கடந்து விட்டேன்.
ஆனால் எழுத்து தளத்தை கண்டவுடன் அதில் பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் , எழுத ஆரம்பித்து இந்த அளவு கவிதைகளும் எழுதி ( பல கவிதைகள் இங்கே பதிவிடவில்லை , இன்னும் ) .
ஒரு அருமையான நட்பு வட்டமும் கிடைத்து எனக்கு மகிழ்ச
நண்பர்கள் (30)

preethi mai
madurai

கார்த்திகா
தமிழ்நாடு

இளையராணி
Alappakkam

கீர்த்தனா
tiruvarur
